ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த எஞ்சின் திறன் மற்றும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள், எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் நிறைவை தருகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

தற்போது இந்த புதிய தலைமுறை மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்துவது போன்றே, எலைட் ஐ20 காரிலும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

அண்மையில் அறிமுகமான ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் இரண்டாம் தலைமுறை எலைட் ஐ20 காரிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

இந்த புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதேநேரத்தில், பவரை வெளிப்படுத்தும் திறனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது. ஆனால், இதனைவிட சற்று கூடுதல் பவர் மற்றும் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக எலைட் ஐ20 காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் இருக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது வெளிநாடுகளில் உள்ள எலைட் ஐ20 மாடலில் இதே ஆப்ஷன்கள் ஏற்கனவே வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் தவிர்த்து, 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்விலும் புதிய எலைட் ஐ20 கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்திற்கு இணையானதாக இருக்கும்.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

அதாவது, கியா செல்டோஸ் காரில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் எலைட் ஐ20, வெனியூ, வெர்னா, க்ரெட்டா உள்ளிட்ட கார்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்!

வழக்கம்போல் பல கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடுதல் பிரிமீயம் மாடலாக புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு எஞ்சின்கள், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்பாக வர இருப்பதால், விலையும் அதிகம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Article Published On: Friday, August 23, 2019, 12:01 [IST]
English summary
Hyundai is planning to launch new Elite i20 car with new engine options in India soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+