புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த கார் எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா என 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை தனித்தனியாக காணலாம்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எரா வேரியண்ட்

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரை வாங்க விரும்புவோருக்கு மிக குறைவான விலை தேர்வாக இந்த எரா வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் அடிப்படை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சில்வர் பீடிங் கொடுக்கப்பட்ட க்ரில் அமைப்பு, பாடி கலர் பம்பர், ஹாலஜன் ஹெட்லைட்டுகள், 14 அங்குல ஸ்டீல் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு மற்றும் சாம்பல் என இரட்டை வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் மேனுவல் ஏசி சிஸ்டம், முன்புற ஜன்னல்களுக்கான பவர் விண்டோஸ் வசதி உள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள திரை மூலமாக கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம். சர்வீஸ் ரிமைன்டர் மற்றும் கதவுகள் திறந்திருப்பது குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். பேஸ் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மேக்னா வேரியண்ட்

எரா வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களுடன் கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்குகள், 14 அங்குல ஸ்டீல் வீல்கள், பாடி கலர் மிரர்கள் மற்றும் கதவு கைப்பிடிகள், விசேஷ கருப்பு வண்ண பூச்சுடன் க்ரில் அமைப்பு, ரூஃப் ஆன்டென்னா, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் இண்டிகேட்டர்களுடன் கூடிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் 2 டின் ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், யுஎஸ்பி போர்ட் இணைப்பு வசதி, கீ லெஸ் என்ட்ரி, டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல், ரியர் ஏசி வென்ட்டுகள், ரியர் பவர் விண்டோஸ், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், விபத்தின்போது கதவுகள் தானியங்கி முறையில் திறக்கும் வசதிகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்

புதிய க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏஎம்டி தேர்வில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளன. பாடி மற்றும் கூரை என இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும். இந்த வேரியண்ட்டின் மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல்களில் 4 அங்குல கன் மெட்டல் அலாய் சக்கரங்களும், டியூவல் டோன் வேரியண்ட்டில் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்களும் உள்ளன. ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டென்னா, கருப்பு வண்ணத்திலான பி பில்லர், இண்டிகேட்டருடன் கூடிய சைடு மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

உட்புறத்தில் முழுவதுமாக கருப்பு வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், 5.2 அங்குல டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் திரை, 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மெநன்ட் சிஸ்டம், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், வாய்ஸ் ரெககனிஷன் தொழில்நுட்ங்கள் உள்ளன. இரட்டை வண்ணத் தேர்வில் வயர்லெஸ் சார்ஜர், முழுமையான ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதிகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட வசதியுடன் சைடு மிரர்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. புரொஜெக்டர் பனி விளக்குகள், ரியர் கேமரா, ரியர் டீஃபாகர் ஆகியவையும் உள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

அஸ்ட்டா வேரியண்ட்

அதிகபட்ச வசதிகளை வழங்கும் டாப் வேரியண்ட்டாக அஸ்ட்டா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், க்ரோம் ஃபினிஷிங்குடன் கதவு கைப்பிடிகள், வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப், அட்ஜெஸ்ட்டெபிள் வசதி கொண்ட ஹெட்ரெஸ்ட்டுகள், ரியர் வைப்பர் வாஷர் மற்றும் லக்கேஜ் லேம்ப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும், 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 194 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2019, 10:36 [IST]
English summary
Here is the variant-wise features details in all new Hyundai Grand i10 Nios. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+