மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

புதிய ஹூண்டாய் QXi என்ற புதிய எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை விட உருவத்தில் சற்றே சிறிய மாடலாகவும், விலை குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாகவும் வர இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு நேர் எதிரான புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் முதல் டீசல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

தற்போது இந்த புதிய எஸ்யூவி சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

வெற்றிகரமான மாடலாக வரும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டிசைன் அம்சங்கள் இந்த எஸ்யூவியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள ஆலையிலிருந்து சாலை சோதனைகளுக்காக இசிஆர் சாலைக்கு செல்லும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் வீடியோ ஒன்றை டீசராக வெளியிட்டு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

இந்த புதிய மாடல் QXi என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை விட உருவத்தில் சற்றே சிறிய மாடலாகவும், விலை குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாகவும் வர இருக்கிறது. இதுவே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டிக்ஸ் என்ற பெயரில் சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

இந்த எஸ்யூவியில் சன்ரூஃப் இடம்பெறறிருப்பதும் தெரிய வந்துளளது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் வசதிகள் இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் QXi எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவையும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. இந்த எஸ்யூவியில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் என்று தெரிகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு வரும் புதிய ஹூண்டாய் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

புதிய ஹூண்டாய் QXi எஸ்யூவியானது புதிய பெயரில் ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2019, 16:22 [IST]
English summary
New Hyundai QXi Compact SUV Teased And Launch Details.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+