ஹூண்டாய் சான்ட்ரோ பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் அம்சங்கள்!
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வேரியண்ட்டுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் டி-லைட் என்ற பேஸ் வேரியண்ட் இனி எரா எக்ஸிகியூட்டிவ் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த வேரியண்ட்டில் முன்புறத்திற்கான பவர் விண்டோஸ், ஏசி, பாடி கலர் பம்பர் மற்றும் இரட்டை வண்ண ரியர் பம்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேக்னா பெட்ரோல் மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்டுகளில் 2 டின் ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜர், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. முன்புறத்தில் ஸ்பீக்கர்கள், மைக்ரோ ஆன்டெனா, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் புளூடூத் கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன.

ஸ்போர்ட்ஸ் ஏஎம்டி வேரியண்ட்டில் சைடு ஏர்பேக், சீட் பெல்ட் ப்ரீ டென்சனர்கள், ரியர் வியூ கேமராக இடம்பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி, மேக்னா ஏஎம்டி மற்றும் அஸ்ட்டா வேரியண்ட்டுகளில் எந்த மாற்றங்கள் இல்லை.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.48 கிமீ மைலேஜையும் வழங்கும் என ஹூண்டாய் தெரிவிக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் தற்போது ரூ.3.90 லட்சம் முதல் ரூ.5.65 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஆனால், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், விலையும் அதிகரிக்கப்பட இருக்கிறது.
Source: Mycarhelpline


Click it and Unblock the Notifications








