புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் லீ ஃபில் ரப் கான்செப்ட்டின் அடிப்படையில்தான் இந்த புதிய சொனாட்டா கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் லீ ஃபில் ரப் கான்செப்ட்டின் அடிப்படையில்தான் இந்த புதிய சொனாட்டா கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது 4 கதவுகள் கொண்ட கூபே ரக மாடலாக இருக்கிறது. இது 8வது தலைமுறை மாடலாக சந்தைக்கு வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

புதிய ஹூண்டாய் சொனாட்டா கார் 45 மிமீ கூடுதல் நீளமும், 25 மிமீ கூடுதல் அகலமும் கொண்டதாக இருக்கிறது. வீல்பேஸ் 35 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30 மிமீ குறைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

புதிய ஹூண்டாய் சொனாட்டா காரில் புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. 4 அறைகள் கொண்ட புதிய ஹெட்லைட்டுகளும், ஹெட்லைட் அறையிலேயே எல்இடி பகல்நேர விளக்குகளும் இடம்பெற்றுள்ளன. யு வடிவிலான க்ரோம் பீடிங் முன்புற பம்பரில் கொடுக்கப்பட்டு இருப்பது வசீகரமான விஷயம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

இந்தியாவில் நேற்று அறிமுகமான புதிய ஹோண்டா சிவிக் காரில் வாடிக்கையாளர்களை வசீகரித்த விஷயம், பின்புறத்தில் யு வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர். அதே சாயலிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்தான் இந்த புதிய ஹூண்டாய் சொனாட்டா காரிலும் உள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

புதிய ஹூண்டாய் சொனாட்டா காரில் சாம்பல் மற்றும் டேன் வண்ணத்திலான டியூவல் டோன் இன்டீரியர் தீம் உள்ளது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிறிய அளவில் கச்சிதமாக காட்சி தரும் ஏசி வென்ட் அமைப்பு, மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

புதிய ஹூண்டாய் சொனாட்டா காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த காரில் ஷிஃப்ட் பை ஒயர் என்ற டிரான்ஸ்மிஷன் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் இடம்பெற இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா கார் அறிமுகம்

இந்த ஆண்டு இறுதியில் புதிய ஹூண்டாய் சொனாட்டா கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்கோடா சூப்பர்ப், டொயோட்டா கேம்ரி, ஹோண்டா அக்கார்டு உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியான மாடலாக இருக்கும்.

Article Published On: Friday, March 8, 2019, 11:51 [IST]
English summary
Hyundai Motors has unveiled New Gen Sonata car at the 2019 Geneva Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+