கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவித்து வரும் பெட்ரோல், டீசல் கார்களை ஒழிப்பதற்கான முதல்கட்ட முயற்சிகள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக வாகனங்களுக்கான தீங்கு இல்லாத எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மோட்டார் உலகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

தற்போதைக்கு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சமுதாயமும், ஹைப்ரிட் எரிபொருள் வகை வாகனங்களும், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுமே சிறந்த தீர்வாக கருதுகின்றன. இதற்கு தக்கவாறு இந்த வாகனங்களுக்கான எரிபொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

இருப்பினும், அதிக தூரம் தங்கு தடையில்லாமல் பயணிப்பதற்கான வாய்ப்பை ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் கண்டறிந்துள்ளது.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

அண்மையில் நடந்த நியூயார்க் ஆட்டோ ஷோவில், ஹைப்ரிட் வகையில் இயங்கும் புதிய சொனாட்டா காரை ஹூண்டாய் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த காரின் கூரையில் சோலார் பேனல்கள் பதிக்கப்பட்டு இருந்தது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

அதாவது, கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு இது ஆரம்ப கட்ட முயற்சிதான்.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

இந்த ஹைப்ரிட் காரில் இருக்கும் பெட்ரோல் எஞ்சினுடன் இருக்கும் சிறிய மின் மோட்டாருக்கு தேவைப்படும் மின்சாரத்தை சிறிதளவு கூடுதலாக வழங்கும் வகையில் இந்த சோலால் பேனல்கள் செயல்படும்.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

இந்த காரில் 152 எச்பி பவரையும், 188 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுக்கு துணையாக 52 எச்பி பவரை அளிக்க வல்ல மின் மோட்டார் உள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஆக்டிவ் ஷிப்ட் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக கியர் மாற்றம் நிகழும் நேரத்தை 30 சதவீதம் குறைக்கிறது.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

இந்த ஹைப்ரிட் எரிபொருள் வகை காருக்கு சூரிய ஒளி மூலமாக கிடைக்கும் மின்சக்தி சிறிதளவு கூடுதல் பயண தூரத்தை வழங்கும். அதாவது, ஆண்டுக்கு 1,300 கிமீ கூடுதலாக பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

கூரையில் சோலார் பேனல்... அசத்தப்போகும் புதிய ஹூண்டாய் சொனாட்டா!

இதனை மேம்படுத்தி, அதிக திறன் வாய்ந்ததாக மாற்றும்போது அதிக தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். தனது பிற கார் மாடல்களிலும் கூரையில் சோலார் பேனல் பொருத்தும் முறையை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai has unveiled 8-th generation Sonata sedan at the 2019 New York motor show which was held earlier this year, in April.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X