ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் மற்றும் கியர்பாக்ஸ் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது. இதன் ரக மாடல்களில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வருவதே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

இந்த நிலையில், காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் வர இருக்கிறது புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்த புதிய எஸ்யூவி வர இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ கப்பா பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் விற்பனையில் இந்த எஞ்சின் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுதான் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கு இது சிறந்த போட்டியாக அமையும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

அதேபோன்று, ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் இந்த புதிய எஸ்யூவி கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

டீசல் மாடலில் 1.4 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

இதன் ரகத்தில் அனைத்து மாடல்களுடன் போட்டி போடும் விதத்தில் இதன் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு காரணமாக, இந்த எஸ்யூவிக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

அடுத்த மாதம் 21ந் தேதி விற்பனைக்கு வருகிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ரகத்தில் முதன்மையாக விளங்கும், மாருதி பிரெஸ்ஸா டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் விபரம்!

ஆனால், இதற்கு மிகச் சிறந்த போட்டியாக எதிர்பார்க்கப்படும் புதிய வெனியூ எஸ்யூவி மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் வருவது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான தேர்வு வாய்ப்பை அளிக்கும். டாடா நெக்ஸான், மஹிந்திரா எஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு ஹூண்டாய் வெனியூ வருகை கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2019, 15:21 [IST]
English summary
New Hyundai Venue SUV's Engine Options Explained.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+