புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி வரும் 21ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2ந் தேதி முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில், இந்த எஸ்யூவி E, S, SX, SX+, SX Dual Tone, SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

E - பேஸ் வேரியண்ட்

(1.2 பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ்)

ஆரம்ப விலை மாடலாக வரும் இந்த வெனியூ வேரியண்ட்டில் 15 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்ம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சிஸ்டம், ஸ்பீடு சென்சிங் டோர் லாக்கிங் வசதி, ஃபுல் வீல் கவர்கள், மேனுவல் ஏசி, டில்ட் ஸ்டீயரிங் வீல், டாக்கோமீட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

S - வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி, ரியர் டீஃபாகர், பாடி கலர் சைடு மிரர்கள், ரூஃப் ரெயில்கள், க்ரோம் க்ரில், லக்கேஜ் லேம்ப், ரியர் ஏசி வென்ட்டுகள், அனைத்து கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், கூல்டு க்ளவ் பாக்ஸ், 2 டின் மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், இரண்டு ட்வீட்டர்கள், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

டிசிடி கியர்பாக்ஸ் கொண்ட எஸ் வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், சூப்பர்விஷன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இந்த வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

SX - வேரியண்ட்

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல் மேனுவல் மாடல்கள்

இந்த வேரியண்ட்டில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன்புறத்தில் கார்னரிங் தொழில்நுட்பத்துடன் கூடிய புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், லெதர் உறையுடன் கூடிய கியர் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

தவிரவும், ரியர் கேமரா, பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பவர் சன்ரூஃப், 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜர், வாய்ஸ் கமாண்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

SX+ - வேரியண்ட்

1.0 லிட்டர் பெட்ரோல் - டிசிடி ஆட்டோமேட்டிக் மாடல்

எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், செக்யூரிட்டி அலாரம், க்ரோம் கைப்பிடிகள், வயர்லெஸ் சார்ஜர், 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ வீடியோ நேவிகேஷன், டெலிமேட்டிக்ஸ், ஸ்மார்ட் சாவியுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஏர் ப்யூரிஃபையர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

SX(O) - வேரியண்ட்

1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ்

இந்த காரில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், க்ரோம் கைப்பிடிகள், ஸ்லைடிங் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், சூப்பர்விஷன் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட் சாவியுடன் கூடிய புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் சார்ஜர், ரியர் வைப்பர், ரியர் வாஷர், ரிமோட் வசதியுடன் டெலிமேட்டிக்ஸ் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் வெனியூ வேரியண்ட் வாரியாக வசதிகள்!

டாப் வேரியண்ட் சிறப்பு!

அனைவரின் ஆவலையும் தூண்டி இருக்கும் டெலிமேட்டிக்ஸ் வசதியானது ஹூண்டாய் வெனியூ காரின் எஸ்எக்ஸ் ப்ளஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து புக்கிங் செய்வது சிறப்பானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 6, 2019, 10:24 [IST]
English summary
New Hyundai Venue SUV variants explained.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+