புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஆஃப்ரோடு பிரியர்களுக்கான சிறந்த பிக்கப் டிரக் வகை தேர்வு மாடலாக இசுஸு வி க்ராஸ் இந்தியர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அவ்வப்போது இந்த புதிய மாடல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய டீசல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுடன் இசுஸுகி வி க்ராஸ் புதிய வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இசுஸு வி க்ராஸ் இசட் - பிரஸ்டீஜ் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் குறிப்பிடப்படுகிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த புதிய வேரியண்ட்டில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய எஞ்சின், கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களை இந்த புதிய இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட் பெற்றுள்ளது. பழுப்பு மற்றும் சாம்பல் வண்ணத்திலான இரட்டை வண்ண லெதர் சீட்டுகள், சாஃப்ட் டச் டேஷ்போர்டு அமைப்பு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெர்றுள்ளது. புதிய சர்ரவுண்ட் ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் பை- எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஸ்போர்ட்டியான ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டென்னா, கருப்பு வண்ணத்திலான பி மற்றும் சி பில்லர்கள் என மிக கவர்ச்சியாக இருக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் 6 ஏர்பேக்குகள், பிரேக் ஓவர்ரைடு தொழில்நுட்பம் சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

தற்போது சுஸுகி வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடலானது ஸ்டான்டர்டு, இசட் மற்றும் இசட் பிரஸ்டீஜ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். சபையர் புளூ, ரூபி ரெட், பியர்ல் ஒயிட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட்டில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் நிலையில், இதர வேரியண்ட்டுகளில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 135 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய இசுஸு வி க்ராஸ் இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட்டிற்கு ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முதல் முன்பதிவும் துவங்கி இருக்கிறது. பிரிமீயம் ஆஃப்ரோடு பிக்கப் டிரக் வாங்க திட்டமிடுவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக இந்த புதிய வேரியண்ட் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2019, 16:46 [IST]
English summary
Isuzu Motors India has launched a new limited-edition variant of their V-Cross SUV, called the 'Z-Prestige'. The new Isuzu V-Cross Z-Prestige variant comes with an all-new powertrain. This includes a 1.9-litre diesel mated to a six-speed automatic gearbox. The new Isuzu V-Cross diesel-automatic variant is priced at Rs 19.99 lakh, ex-showroom (Delhi). Bookings for the new variant starts from today as well.
மேலும்... #இசுஸு #isuzu
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+