கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மிக விரிவான வர்த்தகத் திட்டங்களுடன் அதிரடி காட்ட துவங்கி இருக்கிறது. முதல் மாடலாக வெளியிடப்பட்ட செல்டோஸ் கார் இந்தியாவில் எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்த சூழலில் அடுத்து கார்னிவல் என்ற பிரிமீயம் வகை எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், மூன்றாவது மாடலாக காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கியா திட்டமிட்டுள்ளது.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு மத்தியில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுவிடும்.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றிருக்கும் இந்த புதிய கார் அறிமுகம் குறித்து யூகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கியா நிறுவனமே அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

அதன்படி, அடுத்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு காலத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எதிர்பார்த்தது போலவே, அடுத்த ஆண்டு பண்டிகை கால பட்டியலில் இந்த கார் இடம்பெறுவது உறுதியாகி விட்டது.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

ஹூண்டாய் வெனியூ அடிப்படையிலான மாடலாக இருப்பதால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும். அதேநேரத்தில், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுக்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் வாய்ப்புள்ளளது. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருக்கும்.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மறஅறும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கலாம்.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய கியா காம்பேக்ட் காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் நேரடி இணைய வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். செல்டோஸ் டிசைன் தாத்பரியங்களுடன் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.

கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்!

புதிய கியா காம்பேக்ட் எஸ்யூவி கார் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

குறிப்பு: மாதிரிக்காக கியா ஸ்டோனிக் கார் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2019, 14:59 [IST]
English summary
South Korean car maker, KIA Motors is planning to launch a sub-4 meter SUV in India by second half of next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+