கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

கியா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. முதல்முறையாக இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

கியா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வந்த செல்டோஸ் எகிடுதகிடான வரவேற்பை இந்தியாவில் பெற்றுள்ளது. இந்த நிலையில், இரண்டாவதாக கார்னிவல் எம்பிவி காரும், தொடர்ந்து புதிய காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

கியா செல்டோஸ் காரைவிட குறைவான விலையில் எஸ்யூவி என்பதால் இந்த செய்தி பெரும் ஆவலைத் தூண்டியது. இந்த நிலையில், கியா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியானது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் முதல்முறையாக வெளியாகி இருக்கின்றன.

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

டிசைன் அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் இந்த புதிய எஸ்யூவி சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்தில் இருக்கும் கியா காம்பேக்ட் எஸ்யூவியானது தயாரிப்புக்கு உகந்த நிலையிலான டிசைன் அம்சங்களை பெற்றிருப்பது தெரிகிறது.

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த புதிய எஸ்யூவி QYI என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்ப்டடு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மை பயன்படுத்தி, இந்த மாடலை கியா உருவாக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

அதேநேரத்தில், கியா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இது வேறுபடும். எல்இடி டெயில் லைட்டுகள், சில்வர் வண்ண ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றை இந்த சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களில் காண முடிகிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், புலி மூக்கு க்ரில் அமைப்பு ஆகியவற்றுடன் மினி செல்டோஸ் எஸ்யூவியாக வரும் வாய்ப்புள்ளது.

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரிலும் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

MOST READ:டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் இன்டீரியர் மிகவும் பிரிமீயமாகவும், அதிக சிறப்பம்சங்களுடன் வரும் வாய்ப்புள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் இப்போதே ஆவலைத் தூண்டியுள்ளது.

MOST READ:சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

MOST READ:அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு காரணமாதான்...

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!

கியா செல்டோஸ் எஸ்யூவி ரூ.9.69 லட்சம் ஆரம்ப விலையில் வந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி கார் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு பிற்பாதியில் பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் இடம்பெறும் என்று தெரிகிறது.

Source: Rushlane

Most Read Articles

English summary
All new KIA compact SUV has been spotted testing in India for the first time.
Story first published: Saturday, October 19, 2019, 9:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X