புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை வேரியண்ட் வாரியாக பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியானது T4+, T6+, T8, T10 ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைத்து வந்தது. தற்போது வந்திருக்கும் புதிய மாடலில் T10(O) என்ற புதிய வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, மஹிந்திரா டியூவி300 மாடலானது 5 வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டி-4 ப்ளஸ் வேரியண்ட் விபரம்

இந்த வேரியண்ட்டில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தில் ஓட்டுபவதை உணர்ந்து கொள்வதற்காக ஈக்கோ மோடு வழங்கப்பட்டுள்ளது. வினைல் அப்ஹோல்ஸ்ட்ரி, டில்ட் வசதியுடன் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், ஹீட்டர் வசதியுடன் மேனுவல் ஏசி, ஸ்டீல் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மேலும், பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்திலான க்ரில் அமைப்பு, பின்புறத்தில் எளிதாக ஏறி இறங்குவதற்கான ஃபுட்போர்டு, இரண்டாவது வரிசையில் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.8.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டி-6 ப்ளஸ் வேரியண்ட் விபரம்

இந்த வேரிண்ட்டில் கூடுதலாக பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடிக்கான டீஃபாகர் வசதி, ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளன, புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் வசதியுடன் கூடிய 4 ஸ்பீக்கர்கள் கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. வாய்ஸ் மெசெஜ் வசதியும், இரண்டாவது வரிசை இருக்கையை மடக்கிக் கொள்ளும் வசதியும் கூட உள்ளன.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மேலும், ரியர் வைப்பர், ரிமோட் லாக்கிங், பாடி கலர் கதவு கைப்பிடிகள் மற்றும் சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வீல் கவர்கள், ஸ்கை ராக்குகள், மைக்ரோ ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளன. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.8.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டி8 வேரியண்ட் விபரம்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக கார்னரிங் ஹெட்லைட்டுகள், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்புகள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, டியூவல் டோன் பம்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. கவர்ச்சித் தோற்றத்தை தரும் அலுமினியம் மற்றும் பியானோ பிளாக் பாகங்களுடன் உட்புறம் கூடுதல் அலங்காரமாக தெரிகிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

க்ரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள், முன்புற இருக்கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட், அலாய் வீல்கள், சைடு ஃபுட் போர்டுகள், ரியர் ஸ்பாய்லர், ஓட்டுனருக்கான தகவல்களை அளிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் மல்டி ஃபங்ஷன் டிஸ்ப்ளே, 2 டிவீட்டர்கள் மற்றும் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், ஃப்ளிப் சாவி ஆகியவை இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன. ரூ.9.62 லட்சத்தில் கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டி-10 வேரியண்ட் விபரம்

ஃபாக்ஸ் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லம்பார் சப்போர்ட் வசதி, சாம்பல் நிற பூச்சுடன் அலாய் வீல்கள், இரட்டை வண்ண தேர்வுகள், ஸ்பேர் வீல் கவர், க்ரில் மற்றும் பம்பர் அலங்காரம், எல்இடி பகல்வேளை விளக்குகள் ஆகியவை உள்ளன. ரூ.9.90 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டி10 ஆப்ஷனல் வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக டிரைவர் சீட்டுக்கு கீழே ஸ்டோரேஜ் அறை, முன்புற இருக்கைகளுக்கு லம்பார் சப்போர்ட், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியைவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.10.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2019, 11:43 [IST]
English summary
New Mahindra TUV300 facelift variants explained.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+