மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எமது வாசகர் ஜெயசூர்யா பகிர்ந்து கொண்ட வீடியோ மற்றும் ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக, கார்களை மேம்படுத்தும் பணிகளில் மஹிந்திரா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பல எஸ்யூவி ரக கார்கள் பிஎஸ்-6 எஞ்சினுடன் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

இந்த நிலையில், மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியானது பிஎஸ்-6 எஞ்சினுடன் சென்னை சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் வீடியோ மற்றும் ஸ்பை படங்களை எமது வாசகர் ஜெயசூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 101 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. இந்த எஞ்சின் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மாற்றங்கள் செய்து மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே சில வடிவமைப்பு மாற்றங்களுடன் புதுப்பொலிவுடந் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிஎஸ்-6 டீசல் எஞ்சினை தவிர்த்து பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

இந்த எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட் இணைப்பு வசதிகள், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரிமோட் லாக்கிங், மேனுவல் ஏசி சிஸ்டம், ரியர் வாஷ் மற்றும் வைப்பர், டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் உள்ளன.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஹை ஸ்பீடு வார்னிங் அலர்ட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி ரூ.8.43 லட்சம் முதல் ரூ.10.46 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் இந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ரூ.60,000 முதல் ரூ.80,000 வரையில் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் சென்னையில் சோதனை ஓட்டம்!

ஜெயசூர்யா போன்றே இதுபோன்ற ஸ்பை படங்களையும், வீடியோக்களையும் நீங்கள் அனுப்ப விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர் விபரத்துடன் அனுப்பவும். உங்கள் பெயர் விபரங்கள் செய்தி வெளியிடப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2019, 12:43 [IST]
English summary
A test mule of the Mahindra TUV300 was spied testing in chennai.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+