விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம் அதிக தூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கான புத்தம் புதிய எம்பிவி ரகத்திலான காரை தயாரித்து வருகின்றது. இந்த கார்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம், இந்தியாவிற்கான புதிய பிரிமியம் தரத்திலான எம்பிவி ரக காரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புத்தம் புதிய பிரிமியம் தரத்திலான எம்பிவி ரக கார், எர்டிகா மடாலை ஒத்தவாறு உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கார் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

புதிய எம்பிவி ரக காரின் சிறப்பு அமைப்பு:

எர்டிகா எம்பிவி மாடலிலான புதிய 6 சீட்டர் எம்பிவி ரக கார் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற இருக்கின்றது. அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் எர்டிகா காரிலிருந்து மாறுபட்டு காணும் வகையில், பெரிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர் மற்றும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இதில் இடம்பெற இருக்கின்றன. இத்துடன், பக்கவாட்டு ஸ்கர்ட்டுகள், மேற்கூரை ரெயில்கள், பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் புதிய அலாய் வீல்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற இருக்கின்றன.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

ஸ்விஃப்ட், பலேனோ வழியில் உருவாக்கம்:

இந்த புதிய அப்கிரேஷனைப் பெற்றிருக்கும் எர்டிகா எம்பிவி கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹார்டெக் பிளாட்பாரத்தில் வைத்து தயார் செய்யப்பட உள்ளது. இந்த பிளாட்பாரத்தில் எர்டிகா மட்டுமின்றி ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் உள்ளிட்ட மாடல் கார்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

புதிய எம்பிவி ரக காரின் இருக்கை விபரம்:

இந்தியாவிற்காக பிரத்யேகமாக தயாராகி வரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி ரக கார், தனி கேப்டன் இருக்கையுடன் கூடிய ஆறு சீட்டர் கொண்டதாக தயாராகி வருகின்றது. இந்த கேப்டன் இருக்கை நடு வரிசையில் அமைய இருக்கின்றது.

இத்துடன் இந்த கார் உயர் வகுப்பு சந்தைக்கு ஏற்பவாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் உருவாக இருக்கின்றது.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டொயெட்டா இன்னோவாவிற்கு போட்டி:

அதிகம் தூரம் பயணங்களில் பயன்படுத்தப்படும் காராக டொயோட்டா இன்னோவா இருந்து வருகின்றது. ஆனால், இந்த கார் அதிகம் விலைக் கொண்ட காராக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினரால் பயன்படுத்தத முடியாமல் இருக்கின்றது. இந்த சூழ்நிலையைத் தவிர்க்கும்விதமாக மாருதி சுஸுகி நிறுவனம், எர்டிகா மாடலிலான 6 சீட்டர் காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

எஞ்ஜின்குறித்த தகவல்:

புதிய எம்பிவி ரக 6 சீட்டர் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இது அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க இருக்கின்றது.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

அதேசமயம், இந்த எஞ்ஜின் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ப அதன் எஞ்ஜினை ட்யூன்-அப் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

விற்பனைக்கு கிடைப்பது எப்போது:

பிரிமியம் ரகத்தில் உருவாகி வரும் எம்பிவி ரக எர்டிகா கார், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலை ஓவர்டிரைவ் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

விரைவில் களமிறங்கும் மாருதியின் புதிய 6 சீட்டர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இந்த புத்தம் புதிய மாருதி சுஸுகி 6 சீட்டர் எம்பிவி ரக கார், பிரத்யேகமாக நெக்ஸா டீலர்கள் ஷோரூம் மூலம் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆகையால், இது பட்ஜெட் ரக கார் பிரியர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், எர்டிகாவிற்கு கிடைக்கும் அதே எதிர்பார்ப்பு கிடைக்கும் என கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
New Maruti 6 Seater MPV Premium Ertiga Details. Read In Tamil.
Story first published: Thursday, July 11, 2019, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X