புதிய மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்

புதிய மாருதி ஆல்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் வருகை மற்றும் இதர முக்கிய விபரங்களை பார்க்கலாம்.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஆல்ட்டோ கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை நீண்ட காலமாக தக்க வைத்து வருகிறது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற குறைவான பராமரிப்பு செலவு கொண்ட பட்ஜெட் கார் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி காரணமாக, புதிய ஆல்ட்டோ கார் களமிறக்கப்பட இருக்கிறத

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

இந்த புதிய மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய மாடலில் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டமைப்புடன் மாருதி ஆல்ட்டோ கார் உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் புதிய மாருதி ஆல்ட்டோ காரில் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை மாருதி ஆல்ட்டோ கார் பெற இருக்கிறது.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

மேலும், புதிய வடிவமைப்புடன் மாருதி ஆல்ட்டோ கார் வர இருப்பதாக மாருதி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, ரெனோ க்விட் கார் எஸ்யூவி போன்ற தோற்றத்தில் வந்ததால், வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்தது. அதுபோன்றே, டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வர இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

அதிக பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஆப்ஷன்களுடன் வந்தாலும், விலையை முடிந்தவரை கட்டுக்குள் வைப்பதற்கு மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, புதிய மாடலின் வருகை போட்டியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கலாம்.

வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்!

புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள், மாசு உமிழ்வு பிரச்னைகளால் ஆல்ட்டோ காரின் விற்பனையை நிறுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், புதிய மாடல் வருகை தர இருப்பது உறுதியாகி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது.

Article Published On: Saturday, January 26, 2019, 12:22 [IST]
English summary
Maruti Suzuki is said to be working on an all-new Alto for the Indian market. The new Maruti Alto is expected to be launched in the market by late-2019. The new Maruti Alto 2019 will come with a number of changes including design, additional features and other interior and exterior updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+