மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

மாருதி பலேனோ காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெற இருப்பது உறுதியாகி இருக்கிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட பலேனோ கார் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

கடந்த ஜனவரியில்தான் மாருதி பலேனோ காரின் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் களமிறங்கியது. இந்த நிலையில், மாருதி பலேனோ காரின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

மாருதி பலேனோ காாரின் மைல்டு ஹைப்ரிட் மாடல் டெல்லியில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்படுவதால், இந்த கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பலேனோ காரின் பின்புறத்தில் ஸ்மார்ட் ஹைப்ரிட் என்ற பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ஜனவரி இறுதியில் வந்த மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் அலாய் வீல்களிலிருந்து இந்த புதிய மாடலின் அலாய் வீல்கள் வேறுபடுகின்றன.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

தற்போது மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. ஆனால், மாருதி பலேனோ காரின் டீசல் மாடலில் இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

மாருதி பலேனோ காரின் பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. எனினும், நெதர்லாந்து நாட்டில் விற்பனையாகும் மாருதி பலேனோ காரில் 1,242சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 1,200சிசி திறனுக்கும் மேலான பெட்ரோல் எஞ்சின்களுக்கு வரி அதிகம் என்பதால் இது சாத்தியப்படாது.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தின் மூலமாக சிக்னல்களில் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும். ஆக்சிலரேட்டரை கொடுத்தால் கார் எஞ்சின் உயிர் பெற்றுவிடும். அதேபோன்று, பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படும். தேவைப்படும்போது இந்த பேட்டரியிலிருந்து மின்திறனை பயன்படுத்தி இதிலிருக்கும் சிறிய மின் மோட்டார் எஞ்சினுக்கு கூடுதல் டார்க் திறனை வழங்கும்.

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது மாருதி பலேனோ கார்?

சரி, மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்கிறீர்களா? மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக எஞ்சினின் மாசு உமிழ்வு குறையும். எரிபொருள் சிக்கனம் சற்றே அதிகரிக்கும் வாய்ப்புகளை தருகிறது. அதேபோன்று, கூடுதல் டார்க் திறனை மின் மோட்டார் மூலமாக ஆரம்ப நிலையில் பெற முடியும் என்பதால், செயல்திறனும் சற்று மேம்படும்.

Source: Cartoq

Most Read Articles
English summary
New Maruti Baleno facelift with Mild Hybrid spied testing in Delhi.
Story first published: Saturday, April 6, 2019, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X