மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்தில் மாருதி பலேனோ கார் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. சிறப்பான டிசைன், நம்பகமாான எஞ்சின் தேர்வுகள், சரியான பட்ஜெட் ஆகியவை மாருதி பலேனோ காருக்கு ஸ்திரமான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், மாருதி பலேனோ காரில் தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் K12C என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

தற்போது பயன்படுத்தப்படும் 1.2 கே12பி சீரிஸ் பெட்ரோல் எஞ்சினில் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த புதிய 1.2 லிட்டர் கே12சி பெட்ரோல் எஞ்சின். இதன்மூலமாக, அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான தரத்தை பெற்றிருக்கிறது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சினில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் தலா இரண்டு ஃப்யூவல் இன்ஜெக்டர்கள் கொடுக்கப்ப்டடுள்ளன. இதனால், துல்லியமாக எரிபொருளை செலுத்தும். இதற்கு தக்கவாறு எஞ்சின் உட்புறத்திலும் சில வடிவமைப்பு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

மேலும், புதிய பிஸ்டனுக்கு கீழ்பகுதியில் ஆயில் கூலிங் ஜெட்டுகள் இடம்பெற்றிருப்பதுடன், வெளியேறும் புகையை சிறப்பாக மறு சுழற்சி செய்யும் தொழில்நுட்பத்துடன் மாருதியின் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டமும் சேர்க்கப்பட்டு வர இருக்கிறது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

எனினும், புதிய பெட்ரோல் எஞ்சினின் தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், தற்போதைய தகவல்களின்படி, புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய மாடலைவிட 7 பிஎச்பி பவரையும், 5 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்க வல்லது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதையடுத்து, தனது எஞ்சின்களை மேம்படுத்துவதில் மாருதி கவனம் செலுத்தி வருகிறது. மாருதி சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்துகிறது.

மாருதி பலேனோ காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது!

அதேபோன்று, புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலமாக, தனது வர்த்தகத்தில் எந்த தொய்வும் ஏற்படாத வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது மாருதி சுஸுகி. மாருதி பலேனோ காரைத் தொடர்ந்து ஸ்விஃப்ட், டிசையர் கார்களிலும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Source: Autocar India

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2019, 11:01 [IST]
English summary
According to Autocar India, the new 1.2-litre DualJet petrol engine will be a successor to the current 1.2-litre K12B petrol unit. Codenamed the 'K12C', the new petrol engine is already in use on the international-spec Swift model, since 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+