பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று மாருதி டிசையர். சிறப்பான டிசைன், தொழில்நுட்ப வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் இந்தியர்களின் மனதை வென்ற மாடலாக வலம் வருகிறது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

இந்த நிலையில், வரும் ஜூலை 1ல் அமலுக்கு வர இருக்கும் ஏஐஎஸ்-145 என்ற புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

இதனுடன் சேர்த்து, பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

ஏஐஎஸ்-145 பாதுகாப்பு விதிகளின்படி, புதிய மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

இதுதவிர்த்து, மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவே இருக்கும்.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

புதிய மாருதி டிசையர் காரின் பிஎஸ்-6 எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் ரூ.5.82 லட்சம் முதல் ரூ.9.57 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த புதிய மாடலின் விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.

பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!

அதேநேரத்தில், டீசல் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், விலை ரூ.3,000 விலை அதிகரித்துள்ளது. எனினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாருதி டிசையர் காரின் டீசல் மாடல் கைவிடப்படும் என்று தெரிகிறது.

Article Published On: Friday, June 21, 2019, 10:45 [IST]
English summary
New Maruti Dzire BS6 Petrol Model Launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+