கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஈக்கோ கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

இந்தியாவின் மிக குறைவான விலை எம்பிவி ரக கார் மாடல் மாருதி ஈக்கோ. பட்ஜெட் கார்களுக்கு இணையான விலையில் 7 சீட்டர் மாடலாக கிடைக்கிறது. இதனால், இந்த காருக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

எனினும், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளால் மாருதி ஈக்கோ கார் சந்தையிலிருந்து விலக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த தகவல்களை பொய்யாக்கும் விதத்தில், மாருதி ஈக்கோ கார் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் களமிறங்கி உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

புதிய மாருதி ஈக்கோ காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, அதிவேகத்தை எச்சரிக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன், டூர் வி என்ற வாடகை கார் மாடலிலும் இந்த வசதிகள் இடம்பெற்றுள்ளதால், வாடகை கார் இயக்கும் நிறுவனங்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களையும் கவரும் என்று கருதப்படுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

புதிய மாருதி ஈக்கோ காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து, புதிய ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏர்பேக் இடம்பெற்றிருப்பதற்கு தக்கவாறு மாற்றங்களுடன் இந்த ஸ்டீயரிங் சிஸ்டம் அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

புதிய மாருதி ஈக்கோ காரில் வேறு எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. இந்த கார் 5 சீட்டர், 7 சீட்டர் மற்றும் கார்கோ வேன் ஆப்ஷன்களில் கிடைக்கும். டூர் வி மாடலானது வாடகை கார் மாடலாக விற்பனை செய்யப்படும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 73 எச்பி பவரையும், 101 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிஎன்ஜி மாடலில் இருக்கும் இதே பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 63 எச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஈக்கோ கார் அறிமுகம்!

புதிய மாருதி ஈக்கோ காருக்கு ரூ.3.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மாருதி இணையதள தகவல் தெரிவிக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வரும் வரையில், பழைய ஈக்கோ மாடலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

Most Read Articles

English summary
New Maruti Suzuki Eeco Car Price Details.
Story first published: Monday, April 1, 2019, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X