புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி வேகன் ஆர் கார்தான் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து, புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் கடந்த மாதம் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

அறிமுக தினத்தன்று 12,000 முன்பதிவுகளை இந்த கார் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விலை அறிவிக்கப்பட்டது முதல் முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

தற்போதைய நிலவரப்படி, புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு 16,000 முன்பதிவுகளை பெற்றிப்பதாக மாருதி நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வேரியண்ட்டிற்கு தக்கவாறு காத்திருப்பு காலமும் நீண்டுள்ளது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

புதிய மாருதி வேகன் ஆர் காரும் டால்பாய் எனப்படும் டிசைன் தாத்பரியத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, டிசையர், ஸ்விஃப்ட் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் இந்த கார் வந்துள்ளது. இந்த காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைப்பதும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜையும், 1.2 லிட்டர் மாடல் லிட்டருக்கு 21.5 கிமீ மைலேஜையும் வழங்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

புதிய மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.4.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும், 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.4.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது!

நகர்ப்புற பயன்பாட்டிற்கான சிறந்த மாடலாக இருந்து வந்த புதிய மாருதி வேகன் ஆர் கார் தற்போது நெடுஞ்சாலை பயணத்திற்கு போதுமான திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வந்திருப்பது கூடுதல் கவனத்தை பெறுகிறது.

Source: Autocarindia

Article Published On: Friday, February 1, 2019, 10:42 [IST]
English summary
New Maruti Suzuki Wagon R bookings Receives Overwhelming Response.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+