புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

வரும் 23ந் தேதி புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

ஆல் நியூ வேகன் ஆர்

கடந்த 1999ம் ஆண்டு மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து பழைய பிளாட்ஃபார்மின் வழித்தோன்றல் மாடலாகவே மேம்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் புத்தம் புதிய மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

எடை குறைவு

பழைய வேகன் ஆர் காரைவிட புதிய மாருதி வேகன் ஆர் கார் நீளத்தில் 56 மிமீ வரையிலும், அகலத்தில் 145 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல் பேஸும் 35 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வரும் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்றவாறு இலகு எடை கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட 60 கிலோ எடை குறைவு.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் உருவாக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்பார்மில்தான் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஒப்பான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

புதிய எஞ்சின் ஆப்ஷன்

மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுதவிர்த்து, ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

ஏஎம்டி கியர்பாக்ஸ்

புதிய மாருதி வேகன் ஆர் கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

வேரியண்ட்டுகள்

புதிய மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது LXi, VXi ஆகிய இரண்டு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், VXi AGS என்ற ஒரு ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டிலும் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது VXi, ZXi ஆகிய இரண்டு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதேபோன்று, VXi AGS மற்றும் ZXi AGS ஆகிய இரண்டு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

வண்ணங்கள்

புதிய மாருதி வேகன் ஆர் கார் வெள்ளை, சாம்பல், ஆரஞ்ச், சில்வர், பழுப்பு மற்றும் நீலம் என 6 வண்ணங்களில் தேர்வுக்கு வர இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் குறித்த முக்கிய விஷயங்கள்!

எதிர்பார்க்கும் விலை

புதிய மாருதி வேகன் ஆர் கார் ரூ.4.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட், டாடா டியாகோ மற்றும் டட்சன் கோ உள்ளிட்ட பல பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
New Maruti Wagon R: Few Important Things You Should Know.
Story first published: Wednesday, January 16, 2019, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X