புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

வரும் 23ந் தேதி புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட் ரகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த காருக்கு மாருதி டீலர்களில் முன்பதிவு

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பணம் மற்றும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

வரும் 23ந் தேதி புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட் ரகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த காருக்கு மாருதி டீலர்களில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

ரூ.11,000 முன்பணம் செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாருதி வேகன் ஆர் கார் LXi, VXi மற்றும் ZXi ஆகிய மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

அண்மையில் மாருதி நிறுவனம் வெளியிட்ட டீசர் மற்றும் ஸ்பை படங்கள் மூலமாக புதிய தலைமுறை வேகன் ஆர் காரும் டால்பாய் டிசைன் கான்செப்ட்டில்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், புதிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

பழைய மாடலைவிட புதிய மாருதி வேகன் ஆர் கார் 19 மிமீ கூடுதல் நீளத்துடனும்,, 145 மிமீ கூடுதல் அகலமும், 35 மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை எதிர்பார்க்கலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஏர்பேக்குகள் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் முக்கிய விஷயமாக, 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

இதுவரை பயன்படுத்தப்பட்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படும். அதாவது, இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு துவங்கியது!

பழைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதுவரை நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக இருந்த மாருதி வேகன் ஆர் காரில் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலமாக, நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்ற மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has officially commenced bookings for the new WagonR hatchback. The new 2019 Maruti WagonR can be booked either online or at the brand's dealership for an amount of Rs 11,000.
Story first published: Monday, January 14, 2019, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X