புதிய மாருதி வேகன் ஆர் காரின் விபரங்கள் கசிந்தன!
வடிவமைப்பு, வசதிகளில் புதிய தலைமுறை மாடலாக வெளிவர இருக்கும் புதிய மாருதி வேகன் ஆர் கார் வரும் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரில் இருக்கும் முக்
வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை தூண்டி இருக்கும், புதிய மாருதி வேகன் ஆர் காரின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன.

நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் கார் மாடலாக மாருதி வேகன் ஆர் கார் முதன்மையான தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய மாருதி வேகன் ஆர் உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு, வசதிகளில் புதிய தலைமுறை மாடலாக வெளிவர இருக்கும் புதிய மாருதி வேகன் ஆர் கார் வரும் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரில் இருக்கும் முக்கிய விபரங்கள் அடங்கிய குறிப்பேடு தகவலை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர் கையேட்டில் வழங்கப்பட்டு இருக்கும் தகவல்களின்படி, புதிய மாருததி வேகன் ஆர் கார் 3,655 மிமீ நீளமும், 1,620 மிமீ அகலமும், 1,675 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வேகன் ஆர் கார் 2,435 மிமீ வீல் பேஸ் மற்றும் 4.7 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும் வருகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் பழைய மாடலை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய தலைமுறை மாடல் என்பதை காட்டும் விதத்தில் புதிய ஹெட்லைட், பம்பர் அமைப்பு, க்ரில் அமைப்புடன் வருகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருப்பதுடன், புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. LXi, VXi மற்றும் ZXi ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இதில், LXi பேஸ் வேரியண்ட்டானது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், VXi மற்றும் ZXi ஆகிய வேரியண்ட்டுகளில் 1.0 லிட்டர் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக இருந்து வரும் நிலையில், தற்போது புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் மூலமாக நெடுஞ்சாலை பயணங்களுக்கும் உற்ற கார் மாடலாக தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








