புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

மாருதி எர்டிகா காரின் அடிப்படையிலான புதிய பிரிமீயம் மாடல் எக்ஸ்எல்-6 என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் சொகுசு அம்சங்களுடன் வர இருக்கும் இந்த புதிய எர்டிகா எக்ஸ்எல்-6 கார் வரும் 21ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

இந்த கார் மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கு ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட், வண்ணத் தேர்வுகள் மற்றும் இதர விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 கார் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

இந்த எஞ்சின் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் வர இருக்கிறது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

புதிய மாருதி எர்டிகா காரைவிட புதிய எக்ஸ்எல்-6 கார் நீளத்தில் 50 மிமீ வரையிலும், அகலத்தில் 40 மிமீ வரையிலும், உயரத்தில் 10 மிமீ வரையிலும் அதிகமாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 2,740 மிமீ ஆக இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

மாருதி எர்டிகா காரிலிருந்து பல்வேறு விதத்திலும் வேறுபடுத்தும் விதத்தில், புதிய க்ரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 கார் 6 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் இடம்பெறுவது இதன் மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். அதாவது, அடிக்கடி நீண்ட தூரம் பயணிப்போருக்கு சிறந்த தேர்வாக அமையும்.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் மெட்டாலிக் பிரிமீயம் சில்வர், மெட்டாலிக் மேக்மா க்ரே, பிரைம் ஆபர்ன் ரெட், பியர்ல் பிரேவ் காக்கி, பியர்ல் ஆர்டிக் ஒயிட் மற்றும் நெக்ஸா புளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2019, 11:59 [IST]
English summary
Maruti has revealed the variant details and colour options of the XL6 MPV car in Nexa website.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+