ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

எஸ்யூவி பிரியர்களின் விருப்பமான தேர்வாக மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி விளங்குகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து, பொலிவு கூட்டப்பட்ட புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி முதலாவதாக தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

கடந்த சில மாதங்களாகவே ஸ்பை படங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்து வந்த இந்த புதிய எஸ்யூவி, ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கூடுதல் மெருகேற்றி வந்துள்ளது. முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, பெரிய ஏர்டேம் பகுதி, 6 ஸ்போக் அலாய் வீல்கள், ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டருடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

உட்புறத்தில் முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல், ஏசி வென்ட்டுகள் ஆகியவற்றில் சில்வர் ஆக்சஸெரீகள் மூலமாக உட்புறம் பிரிமீயமாக காட்டுகிறது.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் சாலை நிலைகளுக்கு தக்கவாறு பயன்படுத்தும் டிரைவிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர்த்து, ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த 7 சீட்டர் எஸ்யூவியில் பின்புற கதவை ரிமோட் மூலமாக திறக்கும் வசதியும் உள்ளது. அதாவது, கீ பாப் அல்லது ஸ்மார்ட்ஃபோன் மூலமாக திறந்து, மூட முடியும். புளூடூத் இணைப்பு மூலமாக இந்த வசதி அளிக்கப்படுகிறது.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் 12.1 மல்டிமீடியா திரைகளுடன் கூடிய சாதனங்கள், பின்புற இருக்கை பயணிகளுக்கான டிவி திரைகள், 18 அங்குல அலாய் வீல்கள், பம்பர் மற்றும் பானட் ஷீல்டு உள்ளிட்டவை அடங்கிய பாடி கிட் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்நத எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரையிலான விலையில் தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து சந்தேகம் நிலவுகிறது.

ஆஜானுபாகுவான புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

ஏனெனில், கடந்த 6 மாதங்களில் ஒரு காரை கூட விற்காத நிலையில், இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்த கூடுதல் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். ஒருவேளை, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2019, 18:40 [IST]
English summary
Mitsubishi has launched Pajero Sport facelift model in Thailand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+