சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு வெறித்தனமான வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே, இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது விதிகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாகனங்களுக்கு இன்சூரன்ஸ்ஸை புதுப்பிப்பது மற்றும் டிரைவிங் லைசென்ஸ் பெற்று வாகனங்களை இயக்குவது போன்ற விஷயங்களில், வாகன ஓட்டிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒடிசா மாநிலம் இதற்கு ஓர் உதாரணம். ஒடிசா மாநிலத்தில் டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள சூழலில், வினியோகிக்கப்படும் டிரைவிங் லைசென்ஸின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, கடந்த செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான 3 மாத கால கட்டத்தில், ஒடிசாவில் 5.87 லட்சம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் (Learner's Driving Licence) வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட்ட பழகுனர் ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை ஆகும்.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

ஆனால் ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாத கால கட்டத்தில் வெறும் 84 ஆயிரம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருந்தன. அதாவது 2018 செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2019 செப்டம்பர்-நவம்பர் கால கட்டத்தில், பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் வழங்குவது சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

அவ்வளவு ஏன்? கடந்த 2018ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே ஒடிசாவில் 3.48 லட்சம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள்தான் வினியோகம் செய்யப்பட்டிருந்தன. 2018ம் ஆண்டு முழுவதும் வினியோகிக்கப்பட்டதை காட்டிலும், 2019ம் ஆண்டின் செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் மிக அதிக அளவிலான பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே இதனை சொல்ல வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின், இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிரமான முயற்சியின் விளைவாகதான் இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2019, 9:30 [IST]
English summary
New Motor Vehicles Act: 5.87 Lakh Learner's Driving Licence Issued In 3 Months In Odisha. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+