உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

மத்திய அரசின் அதிரடி முடிவால் நல்ல காரியம் நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

முன்பு அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையும் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

மேலும் ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் 1,000 ரூபாயும், செல்போனில் பேசி கொண்டு வாகனங்களை இயக்கினால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

எனினும் மத்திய அரசு அதனை பொருட்படுத்தவில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி இது என மத்திய அரசு பதில் அளித்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு உறுதியாக அமல்படுத்தியதால் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறைந்து வருகின்றன.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு சண்டிகரில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் 35 சதவீதம் குறைந்துள்ளன. சண்டிகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 40,405 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

சண்டிகர் போக்குவரத்து போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். சண்டிகர் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் 20,738 செல்லான்களையும், பிப்ரவரி மாதம் 26,137 செல்லான்களையும், மார்ச் மாதம் 30,567 செல்லான்களையும் வழங்கியிருந்தனர். அதே சமயம் ஏப்ரல் மாதம் 26,565 செல்லான்களும், மே மாதம் 23,945 செல்லான்களும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்டிருந்தன.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

அதே நேரத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முறையே 21,703 மற்றும் 24,347 செல்லான்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20,628 பேருக்கு செல்லான்கள் வழங்கப்பட்டன. இதன்பின்பு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த முதல் மாதமான செப்டம்பரில் 17,771 செல்லான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன்பின் அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால், போக்குவரத்து விதிமுறை மீறல்கள் சற்று அதிகரித்தது. அந்த மாதத்தில் 22,634 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரு மாதங்களிலும் ஒன்றாக சேர்த்து 40,405 செல்லான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

இதன்படி பார்த்தால் சண்டிகரில் போக்குவரத்து விதிமீறல்கள் 35 சதவீதம் குறைந்துள்ளன. இந்த 40,405 செல்லான்களில் அதிகபட்சமாக ஜீப்ரா லைன் விதிமுறை மீறலுக்காக 10,111 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு 8,939 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.

உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?

இந்த 8,939 பேரில், பெண்கள் மற்றும் பில்லியன் ரைடர்களின் எண்ணிக்கை 1,912. இதுதவிர தவறான இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்த காரணத்திற்காக 4,718 பேருக்கும், அபாயகரமான முறையில் யூ-டர்ன் எடுத்த காரணத்திற்காக 3,624 செல்லான்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த டேட்டாவை சண்டிகர் போக்குவரத்து போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
New Motor Vehicles Act: Traffic Violations Down By 35 Per cent In Chandigarh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X