புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

இந்தியாவில் விற்பனையாகும் நிஸான் சன்னி கார் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெர்ஸா என்ற பெயரில் நிஸான் சன்னி கார் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் நிஸான் சன்னி கார் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு வர இருக்கிறது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

வரும் 12ந் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் புதிய நிஸான் சன்னி கார் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. அங்கு நிஸான் வெர்ஸா என்ற பெயரில் காட்சிப்படுத்தப்படும்.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

இதன் அடிப்படையிலான புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது. எனினும், வடிவமைப்பு, வசதிகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

புதிய நிஸான் சன்னி கார் பரிமாணத்தில் மேலும் பெரிய காராக மாறி இருப்பதாக ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. மேலும், நிஸான் அல்டிமா காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

அமெரிக்காவில் பெட்ரோல் மாடலில் மட்டுமே நிஸான் வெர்ஸா கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் என இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கலாம். புதிய மாடலில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயெின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலுள்ள ரெனோ - நிஸான் கார் ஆலையில் புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் உற்பத்தி செய்யப்படும்.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் வெளியீட்டு விபரம்!

மிட்சைஸ் செடான் கார்களில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் கார் என்பதுடன், வடிவமைப்பில் முற்றிலும் புதிய காராக வருவதால் இந்தியர்கள் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய மாடலைவிட புதிய மாடல் நிச்சயம் சிறப்பான பங்களிப்பை நிஸான் நிறுவனத்துக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2019, 10:35 [IST]
English summary
New Nissan Sunny to be Revealed in on 12 April.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+