புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களை காணலாம்.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

ஜப்பானிய நிறுவனமான நிஸான் மிட்சைஸ் செடான் ரகத்தில் விற்பனை செய்யும் சன்னி கார் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, சன்னி காரின் பின் இருக்கை இடவசதி அனைவராலும் சிலாகித்து கூறக்கூடிய விஷயமாக இருக்கிறது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

இந்த நிலையில், நீண்டகாலமாக பெரிய அப்டேட் இல்லாமல் சன்னி காரின் டிசைன் சலித்து போய்விட்டது. இதனை மனதில் வைத்து புத்தம் புதிய சன்னி காரை நிஸான் உருவாக்கி இருக்கிறது. முதல்முறையாக இந்த புதிய தலைமுறை சன்னி கார் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியி ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த கார் வெர்ஸா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

தற்போதைய மாடலில் இருந்து முற்றிலும் புதிய டிசைன் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் மாறி இருக்கிறது. புதிய வி வடிவிலான க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. பெரிய அளவிலான ஏர்டேம் பகுதியுடன் கவர்கிறது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

பக்கவாட்டிலும் வலிமையான பாடி லைன்கள், பின்னோக்கி சரிந்து செல்லும் கூரை அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் புதிய தலைமுறை சன்னி கார் எல்லோருக்கும் பிடித்தமான மாடலாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

உட்புற வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் உள்ளது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

வெளிநாடுகளில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 122 பிஎச்பி பவரையும், 158 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்தியாவில் தற்போதுள்ள எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும்.

புதிய தலைமுறை நிஸான் சன்னி கார் அறிமுகம்!

தற்போதைய மாடலைவிட வடிவத்தில் பெரிதாக மாறி இருப்பதால், இந்த கார் நிச்சயம் இடவசதியில் சிறப்பானதாக இருக்கும். போட்டியாளர்களை விஞ்சும் அம்சமாக இதன் பின் இருக்கை இடவசதி அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2019, 17:53 [IST]
English summary
Nissan has revealed their 2020 Sunny (Versa) at the Tortuga Music Festival at Ft Lauderdale in Florida. The 2020 Nissan Versa, as called in the US market comes with a complete design change as compared to its previous generation model.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+