புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

இந்தியாவில் புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

போர்ஷே 911 வரிசை ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு உலக அளவில் பெரும் ரசிக பட்டாளம் உள்ளது. மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களிலிருந்து வேறுபடும் தனித்துவமான வடிவமைப்பு இந்த கார்கள் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது. கடந்த 55 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கார்கள் அவ்வப்போது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

அந்த வகையில், எட்டாவது தலைமுறையாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய போர்ஷே 911 வரிசை ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை இருந்த 991 வரிசையிலான 911 ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பதிலாக இப்போது 992 வரிசையிலான 911 மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

இந்தியாவில் 911 வரிசையில் கரீரா எஸ் மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே ஆகிய இரண்டு மாடல்களும் இன்று விற்பனைக்கு களமிறக்கப்ப்டடுள்ளன. இதில், இரண்டாவதாக குறிப்பிடப்படும் கேப்ரியோலே மாடல் திறந்து மூடும் கூரை அமைப்பை பெற்றிருக்கிறது.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

இந்த கார்களின் டிசைன் வெகுவாக கவரும் வகையில் நேர்த்தியாக மாற்றங்க்ள் செய்யப்பட்டுள்ளன. இன்டீரியரிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 10.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் டிரைவிங் மோடு தேர்வு செய்யும் டயல் பொருத்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயம்..

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

தானயங்கி பிரேக்கிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், நைட் விஷன் சிஸ்டம் ஆகியவை இந்த புதிய போர்ஷே 911 கார்களில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர்த்து, ஏராளமான பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

போர்ஷே MMB என்ற புதிய கட்டமைப்பு கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது புதிய தலைமுறை 911 வரிசை கார்கள். இதே பிளாட்ஃபார்மில் புதிய 718 கேமேன் மற்றும் பாக்ஸ்டர் கார்களையும் உருவாக்க போர்ஷே திட்டமிட்டுள்ளது.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

புதிய தலைமுறை போர்ஷே 911 கரீரா எஸ் மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே மாடல்களில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 450 பிஎஸ் பவரையும், 530 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட 30 பிஎஸ் கூடுதல் பவரை வழங்கும் திறன் படைத்ததாக வந்துள்ளது.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

மேலும், இந்த எஞ்சினில் விசேஷ மாசு வடிகட்டி அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருப்பதால், மாசு உமிழ்வு குறைவாக இருக்கும். இந்த காரில் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும் தரும்.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 308 கிமீ வேகம் வரை செல்லும். ஸ்போர்ட் க்ரோனோ என்ற விசேஷே பேக்கேஜ் விருப்பத்தின் தேர்வில் பெறலாம். இது செயல்திறன் கூடுதலான மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய போர்ஷே 911 கரீரா மற்றும் கரீரா எஸ் கேப்ரியோலே கார்கள் அறிமுகம்!

புதிய போர்ஷே 911 கரீரா எஸ் கார் ரூ.1.82 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், கரீரா எஸ் கேப்ரியோ கார் ரூ.1.99 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி ஆர்8, மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2019, 11:53 [IST]
English summary
New Porsche 911 Carrera S and Carrera S Cabriolet Launched In India.
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+