புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய போர்ஷே மசான் கார் அதிரடியான விலை குறைப்புடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

வித்தியாசமான ஸ்டைலிலான போர்ஷே மசான் எஸ்யூவி பணக்காரர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் க்ராஸ்ஓவர் ரக சொகுசு எஸ்யூவி மாடலாக விளங்குகிறது. முந்தைய மாடலானது மசான், மசான் டர்போ மற்றும் மசான் டர்போ பெர்ஃபார்மென்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், புதிய மாடல் மசான் மற்றும் மசான் எஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே வந்துள்ளது.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய மாடல் மாற்றங்களை கண்டுள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, 21 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. மேலும், நான்கு புதிய வண்ணங்களிலும் வந்துள்ளது.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு அமைப்பு டம்பெற்றுள்ளது. சென்டர் கன்சோலில் 10.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. போர்ஷே கனெக்ட் செயலியுடன் இந்த சிஸ்டம் பல்வேறு வசதிகளையும், தகவல்களையும் வழங்கும்.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

இரண்டு டிஜிட்டல் திரைகள் கொண்ட புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. நேவிகேஷன், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

இந்த காருக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆக்சஸெரீகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று, போஸ் அல்லது பர்ம்ஸ்டெர் ஆடியோ சிஸ்டத்தை வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் தேர்வு செய்து வாங்கும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. உட்புறத்தில் பல விதமான இன்டீரியர் தீம்களுடன் கொடுக்கப்படுகின்றன.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

புதிய போர்ஷே மசான் எஸ்யூவியில் இரண்டு எஞ்சின் தேர்வுகள் வழங்கப்டுகின்றன. 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 248 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மசான் எஸ் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 பெட்ரோல் sஎஞ்சின் அதிகபட்சமாக 354 பிஎஸ் பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளன.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

புதிய போர்ஷே மசான் எஸ்யூவியின் ஸ்டான்டர்டு மாடலானது மணிக்கு 229 கிமீ வேகம் வரையிலும், மசான் எஸ் மாடலானது 254 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் பெற்றிருக்கின்றன. ஸ்டான்டர்டு மாடல் லிட்டருக்கு 12.34 கிமீ மைலேஜையும், மசான் எஸ் மாடல் லிட்டருக்கு 11.23 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

புதிய போர்ஷே மசாஇன் எஸ்யூவியில் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் மூலமாக கூடுதலான பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பங்களையும், ஆக்சஸெரீகளையும் பெற முடியும். விரைவான கியர் ஷிஃப்ட்டை வழங்கும் வகையிலான தொழில்நுட்ப மாற்றங்களுடன் இந்த பேக்கேஜ் கிடைக்கும். தவிரவும், லான்ச் கன்ட்ரோல், டிரைவிங் மோடுகள், ஸ்டாப் வாட்ச் உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பெற முடியும்.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

இந்த மாடலில் போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. சொகுசான பயணத்தை உறுதி செய்வதுடன், கார் எஞ்சினின் செயல்திறனுக்கு லாவகமாக ஈடுகொடுத்து, சிறந்த கையாளுமையை வழங்கும்.

புதிய போர்ஷே மசான் எஸ்யூவி கார் அறிமுகம்: விலை அதிரடியாக குறைப்பு!

முந்தைய போர்ஷே மசான் ஸ்டான்டர்டு மாடலானது ரூ.80.38 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய போர்ஷே மசான் ஸ்டான்டர்டு மாடலானது ரூ.69.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ரூ.10 லட்சம் வரை குறைவான விலையில் புதிய மாடல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசான் எஸ் மாடலுக்கு ரூ.85.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2019, 14:39 [IST]
English summary
Luxury car maker Porsche has launched the Macan Facelift in India at Rs 69.98 lakh (ex-showroom India).
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+