விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

போர்ஷே நிறுவனத்தின் மசான் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின்கீழ், போர்ஷே நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம், பந்தயக் கார் தயாரிப்பில் உலக புகழ்வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது. அதேசமயம், அது சொகுசு கார் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், பல்வேறு ரகத்திலான கார்களை தயாரித்து உலக முழுவதிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

அந்தவகையில், இந்தியாவிலும் அதன் முன்னணி சொகுசு மாடல் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு, அந்த நிறுவனம் விற்பனைச் செய்துவரும் மசான் மாடலை, தற்போது புதுப்பித்திருப்பது கூறப்படுகிறது. இந்த புதுப்பித்த மாடலை அடுத்து வரும் மாதங்களில், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை கார்வேல் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

போர்ஷே நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான, மசான் எஸ்யூவி ரக காரும். இந்த கார் புத்தம் புதிய காஸ்மெடிக் மற்றும் சிறப்பம்சங்களைப் பெற்று புதுப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் இரண்டு விதமான ட்ரிம்களில் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், மசான் மற்றும் மசான் எஸ் என்ற பெயர்களில் அவை கிடைக்கும்.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

இதில், மசான் ட்ரிம்மிற்கு ரூ. 69.98 லட்சமும், மசான் எஸ் ட்ரிம்மிற்கு ரூ. 85.03 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த அதிக விலைக்கேற்ப அந்த பல்வேறு தொழில்நுட்ப அம்சமும், சொகுசு வசதிகளும் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அது குறித்த கணிசமான தகவலை வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம். ஆனால், இந்த புதுப்பிக்கப்பட்ட கார்குறித்த சில முக்கியமான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

அந்தவகையில், போர்ஷே மசான் புதுப்பிக்கப்பட்ட மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு, அதன் ட்வீக்கட் பம்பர் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதிய லுக்கிலான 3டி டிசைன் எலிமெண்ட் ஹெட்லேம்ப்புகள் மற்றும் டெயில் லேம்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் பின்புறத்தில் இரு டெயில் மின் விளக்குகளையும் இணைக்கும் வகையில், எல்இடி மின் விளக்கு ஸ்ட்ரிப் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பின்புறத்திற்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

தொடர்ந்து இந்த கார், கல்வனைஸ்ட் பாடி, லாவா கருப்பு நிறத்திலான சைட் பிளேட்கள், மேட் பிளாக் நிறத்திலான சைட் விண்டோ, க்ளாஸ்ஸி கருப்பு நிறத்திலான ரூட் ஸ்பாய்லர் மற்றும் வெளிப்புறத்தின் வலது மற்றும் இடது புறத்தில் இரண்டு சிங்கிள் டெயில் பைப்புகள் மேட் சில்வர் நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, க்ளாஸ்ஸி சில்வர் நிறத்திலான போர்ஷே லோகோ பின்புற ஹேட்ச்சில் ஒட்டப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த கார் வெள்ளை மற்றும் கருப்பு நிற தேர்வில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

ஐந்து இருக்கை அமைப்பைக் கொண்டிருக்கும் மசான் ட்ரிம்மின் உட்புறம் கருப்பு வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், இருக்கைகளுக்கு பிரிமியம் ரகத்திலான லெதர் போர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், இந்த காரில் ஸ்மோக்கர் பேக்கேஜ், ஃபேப்ரிக் ரூஃப் லைனிங், இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் கனெக்டிவிட்டி சாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

இதனால், ஒருவருக்கு பின் ஒருவர் காத்திருந்து சார்ஜ் செய்யும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் பல பிரிமியம் வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. இதே வசதிகள்தான் மசான் எஸ் ட்ரிம்மிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதைச் சற்று கூடுதலான சொகுசு வசதிகளையும் மசான் எஸ் ட்ரிம் பெற்றிருக்கின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

அந்தவகையில், மசான் ட்ரிம்மின் லக்கேஜ் கெபாசிட்டி 500 லிட்டராக இருக்கின்றது. ஆனால், மசான் எஸ் ட்ரிம்மில் ரியர் சீட்டை மடக்கி வைப்பதன் மூலம், அதனை 1,500 லிட்டராக அதிகரித்துக்கொள்ள முடியும். மேலும், மசான் எஸ் மாடல், கருப்பு மற்றும் க்ரே நிறத்திலான இன்டீரியர் ஆப்ஷனில் கிடைக்க இருக்கின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்க இருக்கும் போர்ஷே மசான்... கார் குறித்த சிறப்பு தகவல்!

போர்ஷே மசான் ட்ரிம்மில், டர்போசார்ஜட் இன்லைன்-4, 2.0 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தம் திறன் கொண்டது.

அதேபோன்று, மசான் எஸ் ட்ரிம்மில் 3.0 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 348 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த இரு எஞ்ஜின்களிலும் 7- ஸ்பீடு பிடிகே தரத்திலான மேனுவல் கன்ட்ரோல் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஸ்டியரிங் வீலுக்கு அருகில் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 27, 2019, 19:06 [IST]
English summary
New Porsche Macan To Be Launched Soon. Read In Tamil.
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+