புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய மாடலில் இருக்கும் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

இந்தியாவின் 10 லட்ச ரூபாய் எஸ்யூவி மார்க்கெட்டின் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்று ரெனோ டஸ்ட்டர். அறிமுகமான புதிதில் போட்டி ஏதுமின்றி, தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தது. டஸ்ட்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பல நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டில் புதிய மாடல்களை களமிறக்கின.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

இந்தநிலையில், சந்தைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அவ்வப்போது ரெனோ டஸ்ட்டர் மேம்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிய மாடல் தயாராகி வருகிறது.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் இந்த எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்படுகிறது.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்டு இருப்பதால், டிசைனில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. ஸ்பை படங்களில் புதிய ஹெட்லைட், க்ரில் அமைப்பு, டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருப்பது தெரிய வருகிறது.

View this post on Instagram

Spotted the new @renaultindia #Duster on test.

A post shared by MotorScribes (@motorscribes) on

அதேபோன்று, புதிய அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இன்டீரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று கருதப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய மாற்றங்களாக எதிர்பார்க்கலாம்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ டஸ்ட்டரில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் தொடர்ந்து பயன்படுத்தப்படும். பேஸ் மாடலில் 85 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் விதமாகவுவம், இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெறும். 110 பிஎஸ் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் இடம்பெறும்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

மேலும், பெட்ரோல் எஞ்சினும் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. அதாவது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, புதிய ரெனோ டஸ்ட்டர் விலையிலும் சற்று கணிசமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களாலும் ரெனோ டஸ்ட்டருக்கு கடும் நெருக்கடி உள்ளது. இந்த சந்தைப் போட்டியை போக்கிக் கொள்வதற்கு புதிய மாடல் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Motorscribes

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2019, 16:53 [IST]
English summary
A test mule of the Renault Duster SUV was spied in Chennai.
மேலும்... #ரெனால்ட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+