புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

புதிய பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் மார்க்கெட்டில் கடுமையான சந்தைப் போட்டி நிலவுகிறது. புதிய மாடல்களின் வரவும் பழைய மாடல்களுக்கு கடும் நெருக்கடியை தந்து வருகின்றன. இந்த நிலையில், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியும் சந்தைப் போட்டியில் சிக்கி தத்தளிக்கிறது.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

எனவே, விற்பனையை அதிகரிக்கும் விதமாக, புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ரெனோ டஸ்ட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

பரிமாணத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால், டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முகப்பில் க்ரோம் வில்லைகளுடன் கூடிய புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பம்பரும் புதியது.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

பக்கவாட்டில் இரட்டை வண்ண அலாய் வீல்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. ரூஃப் ரெயில்கள், இண்டிகேட்டர்களுடன் கூடிய சைடு மிரர்கள், கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களுடன் கவர்கிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டருக்கு இடையில் மிக பெரிய பிளாஸ்டிக் கிளாடிங் சட்டம் பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய மாற்றமாக கூறலாம்.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

உட்புறத்திலும் சிறிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட புதிய எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதுவரை வழங்கப்பட்டு வந்த 85 பிஎஸ் டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது.

புதுப்பொலிவுடன் வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!

வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இரண்டாம் தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள மாடலிலேயே சிறிய மாற்றங்களுடன் ரெனோ நிறுவனம் களமிறக்க உள்ளது சற்று ஏமாற்றத்தை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Source: Teamdusterindia

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2019, 11:31 [IST]
English summary
The 2020 Renault Duster facelift has been spotted testing in India. This is the first time that the SUV has been spotted testing sans any camouflage and this gives us a clear look at the design and styling aspects.
மேலும்... #ரினால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+