க்விட் அடிப்படையிலான மினி எஸ்யூவி மாடலை களமிறக்கும் ரெனோ!
க்விட் கார் அடிப்படையிலான மினி எஸ்யூவி மாடலை ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ரெனோ க்விட் கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது. இந்த நிலையில், ரெனோ க்விட் கார் கட்டமைப்புக் கொள்கையின் கீழ் புதிய மினி எம்பிவி கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ட்ரைபர் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கார் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது மிக குறைவான விலையில் வரும் 7 சீட்டர் மாடலாக வருவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து, க்விட் கார் அடிப்படையிலான மினி எஸ்யூவி மாடலையும் ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கார் HBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்த கார் 5 சீட்டர் மாடலாக இருக்கும். ரெனோ ட்ரைபர் மற்றும் டஸ்ட்டர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடையிலான விலை ரகத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், மினி எஸ்யூவி மாடல்களுக்கு இணையான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

விரைவில் வரும் ட்ரைபர் காரில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய காரில் பயன்படுத்தப்படும். மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய ரெனோ மினி எஸ்யூவி கார் மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எஸ்யூவி கார் ஆசையுடன் இருக்கும் பட்ஜெட் குறைவாக இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை இந்த புதிய மினி எஸ்யூவி கச்சிதமாக பூர்த்தி செய்யும் வாய்ப்புள்ளது. விரைவில் இந்த கார் குறித்த பல முக்கிய விஷயங்கள் தெரிய வரும் வாய்ப்பு இருக்கிறது.
Source:Livemint


Click it and Unblock the Notifications








