ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்களை களமிறக்க ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, எஸ்யூவி கார்களுடன் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ளது.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

மேலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் இந்த எஸ்யூவி கார்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வர இருக்கின்றன. இந்த நிலையில், ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எஸ்யூவி மாடல்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாடல் கமிக் எஸ்யூவி.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் ஸ்கோடா நிறுவனத்தின் புத்தம் புதிய கமிக் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், இந்த எஸ்யூவி விரைவில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக இந்தியாவில் பொது பார்வைக்கு வர இருக்கிறது.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

இந்த எஸ்யூவியின் கான்செப்ட் மாடலானது தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த எஸ்யூவி இந்தியாவுக்காக MQB A0 என்ற புதிய கட்டமைப்பு கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட இருக்கிறது.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் மாடலைவிட விலை குறைவான மாடலாக உருவாக்கும் வகையில் இந்த கட்டமைப்பு கொள்கை பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு தக்கவாறு பாகங்கள் பயன்படுத்தப்படும்.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

இந்தியாவுக்காக உருவாக்கப்படும் புதிய கமிக் எஸ்யூவியின் தயாரிப்புப் பணிகளை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும். இந்த எஸ்யூவியானது அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

டிசைனை பொறுத்தவரையில், சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் மாடலில் இருந்து அதிக மாற்றங்கள் இல்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், இந்த எஸ்யூவிக்கு அதிகபட்சம் உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்தவும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்!

இந்த புதிய எஸ்யூவி ரூ.10 லட்சம் ஆரம்ப விலை கொண்ட மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. அதாவது, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2019, 9:57 [IST]
English summary
According to Skoda official, the all new Kamiq SUV will be launched in India by end of next year.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+