ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் கார் சந்தைகளில் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களின் விற்பனை எகிடுதகிடான வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனை மனதில் வைத்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கமிக் என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவியை உருவாக்கி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோவில் இந்த புதிய கமிக் எஸ்யூவி மாடலை ஸ்கோடா கார் நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக புதிய கமிக் எஸ்யூவியின் உருவரை படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் உருவரை படங்களில் காணக்கூடிய டிசைன் அம்சங்கள் தயாரிப்பு நிலை மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் போன்று, ஸ்கோடா கமிக் எஸ்யூவியிலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இரண்டு பிரிவாக காண முடிகிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், இன்டிகேட்டர்கள் ஹெட்லைட்டுக்கு மேலே தனியாக உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி கிராஸ் எஸ்யூவி உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB AO பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைன் அடிப்படையில் வேறுபடுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 131 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மேலும், இது ஹைப்ரிட் மாடலாகவும் இருக்கலாம். இதற்காக இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் போலவும் மற்றொன்றானது பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 27 பிச்பி பவரையும், 70 என்எம் டார்க் திறனையும் காருக்கு கூடுதலாக வழங்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

முழுமையாக பெட்ரோல் நிரப்பி, பேட்டரியையும் முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு லாங் டிரிப் செல்லும்போது, 645 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

வரும் மார்ச்சில் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி, நடப்பு ஆண்டு மத்தியில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இணையான ரக எஸ்யூவியை களமிறக்கும் ஸ்கோடா!

கோடியாக், கரோக் வரிசையில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாவது புதிய எஸ்யூவி மாடலாக அறிமுகமாக இருக்கிறது. மேலும், விலை குறைவான ஸ்கோடா எஸ்யூவியாக வருவதால் ஆவலைத் தூண்டுகிறது. இந்த புதிய எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 30, 2019, 17:07 [IST]
English summary
Skoda Auto has released the official design sketches of the upcoming Kamiq SUV. The Skoda Kamiq SUV is based on the Vision X Concept, showcased at the 2018 Geneva Motor Show. The Skoda Kamiq is the smallest SUV in the brand's lineup, which includes the Karoq and the range-topping Kodiaq.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+