ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி சந்தையில் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி தனித்துவமான தேர்வாக இருந்து வருகிறது. பிரம்மாண்டமான தோற்றம், ஸ்கோடா நிறுவனத்தின் அசத்தலான டிசைன் அம்சங்கள் இந்த எஸ்யூவிக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

தற்போது ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் நிறைந்த ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

ஸ்கோடா ஸ்கவுட் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய வேரியண்ட்டானது அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். சாதாரண வேரியண்ட்டுகள் 188 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கும் நிலையில் ஸ்கவுட் வேரியண்ட் 194 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருகிறது. இதன்மூலமாக, கரடுமுரடான சாலைகள் மற்றும் சரிவான பாதைகளில் எளிதாக செல்ல முடியும்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

இதர வேரியண்ட்டுகளை போலவே ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று, ஈக்கோ, கம்ஃபோர்ட், நார்மல், ஸ்போர்ட், இன்டிவிஜூவல் மற்றும் ஸ்னோ ஆகிய டிரைவிங் மோடுகள் இடம்பெற்றிருப்பதோடு, கூடுதலாக ஆஃப்ரோடு மோடும் வழங்கப்பட்டு இருக்கும். ஆஃப்ரோடு மோடில் செயல்திறன் மிக நிதானமாகவும், சஸ்பென்ஷன் அமைப்பு இறுக்கமாக மாறிக் கொள்ளும்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் தொழில்நுட்பங்களும் ஆஃப்ரோடு மோடில் செயல்படும். இந்த தொழில்நுட்பம் தவிர்த்து, ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் இடம்பெற இருக்கின்றன. இந்த மாடலில் 19 அங்குல அலாய் வீல்கள், சில்வர் அலங்கார வேலைப்பாடுகளுடன் க்ரில் அமைப்பு, ரூஃப் ரெயில்கள் மற்றும் சைடு மிரர்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். க்ளவ் பாக்ஸ் மற்றும் சீட் கவர்களில் ஸ்கவுட் பேட்ஜ் பொறிக்கப்பட்டு இருக்கும். எல்இடி ஹெட்லைட்டுகள், ஏர்பேக்குகள், கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் மற்றும் பவர் அட்ஜெஸ்ட் ஓட்டுனர் இருக்கை என ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

இந்த ஸ்கவுட் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த காரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் மாடல் இந்தியா வருகிறது!

இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் ஸ்டைல் வேரியண்ட் ரூ.35.37 லட்சத்திலும், எல் அண்ட் கே வேரியண்ட் ரூ.36.79 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்கவுட் வேரியண்ட் இதனைவிட சற்று கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும். அதாவது, எக்ஸ்ஷோரூம் விலை ரூ.38 லட்சத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படலாம்.

Source: Cardekho

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா
English summary
Skoda is planning to introduce a more Off-road focused variant of their flagship SUV, the Kodiaq SUV in the Indian market. The new Skoda Kodiaq Scout is already on sale in international markets and will now make its way to India as well.
Story first published: Wednesday, April 17, 2019, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X