புதிய ஸ்கோடா ஆக்டேவியா அதிகாரப்பூர்வ படம் கசிந்தது!
புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் அதிகாரப்பூர்வ படம் தவறுதலாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த படம் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பிலும், தொழில்நுட்ப வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அடுத்த மாதம் 11ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 11வது தலைமுறை மாடலாக வெளிவர இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் உலக அளவில் வாடிக்கையாளர்களின் ஆவலை கிளறியுள்ளது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் இந்த காரின் அதிகாரப்பூர்வமான உருவரை படங்களை ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டிருந்தது. இதனிடையே, இந்த காரின் அதிகாரப்பூர்வ படம் ஒன்று ஸ்கோடா நிறுவனத்தின் இணையதளத்தில் தவறுதலாக வெளியாகிவிட்டது.

இந்த படத்தை ஸ்கோடா கார் பிரியர்களின் இன்ஸ்டாகிராம் குழு மூலமாக வெளிவந்துவிட்டது. இந்த படத்தில் ஸ்கோடா ஆக்டேவியா காரின் டிசைன் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது தெரிகிறது. மேலும், புதிய தலைமுறை ஸ்கோடா ஸ்காலா ஹேட்ச்பேக் கார் மற்றும் சூப்பர்ப் செடான் கார்களின் டிசைன் அம்சங்களை காண முடிகிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், முப்பரிமாண தோற்றத்தை வழங்கும் பட்டாம்பூச்சி வடிவ க்ரில் அமைப்பு, மெஷின் கட் அலாய் வீல்கள், ஸ்கோடா பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் உட்புறம் மிகவும் பிரிமீயமாகவும், தரமான பாகங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற இருக்கிறது. புதிய ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு ஸ்போக் அமைப்புடைய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய தலைமுறை ஆக்டேவியா காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேலும், 48v பேட்டரி- மின் மோட்டார் அடங்கிய ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய மாடலானது 1.4 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகின்றது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கிறது. ரூ.16 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Source: Cochespias/Instagram


Click it and Unblock the Notifications








