புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்திய அறிமுக விபரம்!
புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் இந்திய வருகை விபரம் வெளியாகி இருக்கிறது.

எக்ஸிகியூட்டிவ் செடான் ரக கார் சந்தையில் ஸ்கோடா ஆக்டேவியாவிற்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்தநிலையில், கால மாற்றத்திற்கு தக்க அம்சங்களுடன் முற்றிலும் புதிய தலைமுறை ஆக்டேவியா காரை ஸ்கோடா உருவாக்கி வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வரும் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. தற்போதைய மாடலைவிட உருவத்தில் சற்று பெரிய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா கமிக் எஸ்யூவியை போலவே, இந்த புதிய ஆக்டேவியா காரில் சில டிசைன் அம்சங்களை காண முடிகிறது. இந்த காரில் ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வாய்ஸ் கன்ட்ரோல், சாஃப்ட் டச் பேனல்கள் உள்ளிட்ட ஏராளமான பிரிமீயம் அம்சங்கள் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் கொடுக்கப்பட இருக்கின்றன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பதாக தெரிகிறது. மேலும், இந்த புதிய எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்ககிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா என இரண்டு கார்களுமே டிசைனில் வெகு கவர்ச்சியாகவும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கின்றன. மேலும், ஹோண்டா சிவிக், ஹூண்டாய் எலான்ட்ரா, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார்களுக்கு புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் போட்டியாக இருக்கும்.
Source: ACI


Click it and Unblock the Notifications