புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது கொண்டு வரப்பட உள்ளது என்பது குறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

போட்டியாளர்களைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த இருக்கும் புதிய அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத ஆவலை தூண்டியுள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

ஏனெனில், போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பான இடவசதியை டாடா கார்கள் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்புதான் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதற்கான காரணமாக கூறலாம். இந்த நிலையில், புதிய அல்ட்ராஸ் கார் டிசம்பர் முதல் வாரத்தில் மீடியா டிரைவ் நிகழ்ச்சியின்போது இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்திருந்தோம்.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

இந்த நிலையில், இந்த புதிய அல்ட்ராஸ் கார் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் மிகவும் கவரும் வகையில் இருக்கும். இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களிடமிருந்து இதன் டிசைன் நிச்சயம் தனித்துவமாக இருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

இந்த காரில் 7.0 அங்குல ஃப்ளோட்டிங் ரக தொடுதிரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த காரில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சின் 102 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
According to reports, All New Tata Altroz car is expected to launch early next year.
Story first published: Tuesday, October 29, 2019, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X