புதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா!

புதிய எலெக்ட்ரிக் செடான் ரக காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா!

அட்டகாசமான புதிய கார் மாடல்களை களமிறக்கி வாடிக்கையாளர்களின் கவனத்ததை ஈர்த்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், டாடா டியாகோ மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி இருக்கும் அந்நிறுவனம், தனிநபர் சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில், அந்நிறுவனம் வெளியிட்ட டாடா இ- விஷன் என்ற எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் அடிப்படையிலான புதிய செடான் காரை அந்நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய மாடல் மார்ச்சில் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி கன்டெர் பட்செக் கூறியிருப்பதாவது," என்னால் இப்போது எதையும் உறுதியாக கூற இயலாது. ஆனால், அடுத்த சில வாரங்களில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம். அதில், இ-விஷன் கான்செப்ட் அடிப்படையிலான மாடலும் இடம்பெற்றிருக்கும். ஆனால், அது ஆல்ஃபா கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

புதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா!

இது நிச்சயமாக இ- விஷன் கான்செப்ட் காரின் அடிப்படையிலான புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்தான் என்று பிசினஸ் ஸ்டான்டர்டு வர்த்தக இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், கன்டர் பட்செக் கூறியிருப்பது போல, புதிய எலெக்ட்ரிக் செடான் கார் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கார்களை ஒமேகா மற்றும் ஆல்ஃபா என்ற இரண்டு பிளாட்ஃபார்ம்களில் கட்டமைத்து வருகிறது. அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. லேண்ட்ரோவர் டி8 பிளாட்ஃபார்மின் தழுவிய கட்டமைப்பு கொள்கைதான் ஒமேகா பிளாட்ஃபார்ம் ஆகும்.

இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் செடான் கார் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆல்ஃபா பிளாட்ஃபார்மின் மூலமாக மின்சார கார்களுக்கான பல்வேறு திறன் கொண்ட பேட்டரி, கியர்பாக்ஸ் மற்றும் மின்மோட்டார்களை பயன்படுத்த முடியும்.

புதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா!

இந்த ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் கார்களில் பேட்டரியை காரின் தளத்தில் இருக்குமாறு பொருத்த இயலும். இதன்மூலமாக, அதிக நிலைத்தன்மையையும், கையாளுமையும் பெற முடியும்.

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இ- விஷன் கான்செப்ட் எலெக்ட்ரிக் செடான் கார் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதன் தயாரிப்பு நிலை மாடல் இந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Read Articles
English summary
Tata Motors is all set to unveil the production-spec version of their all-new electric car in the coming weeks. According to Business Standard, the new Tata electric car would be similar to the E-Vision concept and will be based on the brand's new 'Alpha' architecture.
Story first published: Tuesday, February 12, 2019, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X