டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

புத்தம் புதிய டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களின் வரவால், டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கடும் சந்தைப் போட்டி எழுந்துள்ளது. இந்த நெருக்கடியை போக்கிக் கொள்ளும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இரட்டை வண்ணத் தேர்வு மற்றும் சன்ரூஃப் வசதிகளை அண்மையில் அறிமுகம் செய்தது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

இதைத்தொடர்ந்து, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஹாரியர் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடலானது விசேஷமான கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பண்டிகை காலத்திற்கு முன்னதாக வர இருக்கும் இந்த புதிய மாடலை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

இந்த நிலையில், இந்த புதிய ஹாரியர் டார்க் எடிசன் மாடலுக்கு ரூ.16.76 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதே விலையில்தான் டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்இசட் டியூவல் டோன் என்ற டாப் வேரியண்ட் விற்பனையில் உள்ளது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்படுகிறது. இதில், 17 அங்குல கருப்பு வண்ணத்திலான அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பேட்ஜ் மற்றும் கைப்பிடிகள் மட்டுமே க்ரோம் பூச்சுடன் இடம்பெற்றுள்ளன.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

தற்போது விற்பனையில் உள்ள மாடலில் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்படுகிறது. ஆனால், டார்க் எடிசனில் கருப்பு வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும், மர அலங்கார வேலைப்பாடுகளுடன் மிகவும் பிரிமீயமாக வர இருக்கிறது. மேலும், டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கிடைக்கும்.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

இந்த காரில் பிரத்யேக கருப்பு வண்ணத்தை தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போது, இந்த எஞ்சின் 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றதாக மாற இருக்கிறது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

இந்த டார்க் எடிசன் தவிர்த்து, காலிஸ்ட்டோ காப்பர், தெர்மிஸ்ட்டோ கோல்டு, ஏரியல் சில்வர், டெலிஸ்டோ க்ரே, ஆர்கஸ் ஒயிட் மற்றும் இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் விலை விபரம் கசிந்தது!

டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.16.76 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

Source: Team BHP

Image Courtesy: Autocarindia

Article Published On: Friday, August 30, 2019, 13:34 [IST]
English summary
According to media report, New Tata Harrier all new black Dark edition variant will be priced at Rs.16.76 in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+