டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

புதுப்பொலிவுடன் வரும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்பை படங்களையும் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் சிறந்த தேர்வாக வலம் வருகிறது. ஆனால், புதிய வரவுகளின் எதிரொலியால் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. இதையடுத்து, புதுப்பொலிவுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

இந்த புதிய மாடல் சில மாதங்களாக சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் முதல்முறையாக காடிவாடி தளத்தில் வெளியாகி உள்ளது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஹெட்லைட், பனி விளக்குகள், பம்பர் ஆகியவற்றில் மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முகப்பு மிக வசீகரமாக இருக்கும் என்பது ஆவலை தூண்டுகிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

புதிய அலாய் வீல்கள் அமைப்பு முக்கிய மாற்றமாக தெரிகிறது. பக்கவாட்டில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் மற்றொரு முக்கிய மாற்றமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் கூடுதல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வலிமையான உடல்கூடு அமைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேகமரா உள்ளிட்ட அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்படும். இந்த கார் குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிலையில், இப்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

டாடா நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய வண்ணத் தேர்வுகளிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் காட்சிக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட கூடுதல் விலையில் புதிய டாடா நெக்ஸான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் ஸ்பை படங்கள் வெளியானது!

டாடா நெக்ஸான் காரின் மின்சார மாடலின் உருவாக்கப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த 18 மாதங்களுக்குள் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் மாடலைவிட ரூ.4 லட்சம் வரை கூடுதல் விலையில் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Article Published On: Monday, August 12, 2019, 15:34 [IST]
English summary
Tata Motors is said to be working on updating a number of its models in the Indian market, including its popular sub-4 metre compact SUV, the Nexon. The SUV was launched in India back in 2017 and since then has been a popular choice in the competitive SUV segment in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+