டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக வந்திருக்கும் இந்த புதிய நெக்ஸான் கார் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடலானது கருப்பு மற்றும் சில்வர் வண்ண கூரையுடன் டியூவல் டோன் வண்ணத் தேர்வில் வந்துள்ளது. சைடு மிரர்கள், க்ரில் அமைப்பு, சக்கரங்களில் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் கொடுக்கப்பட்டு இருப்பது அட்டகாசமாக இருக்கிறது. அத்துடன், பின்புறத்தில் க்ராஸ் எடிசன் பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

உட்புறத்திலும் அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன. இருக்கை கவர்கள், ஏர்வென்ட்டுகள் உள்ளிட்டவை ஆரஞ்ச் வண்ணத்திலும், டேஷ்போர்டு, கதவுகளில் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு பூச்சு அலங்காரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். நெக்ஸான் எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் க்ராஸ் எடிசனுக்கு ரூ.7.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.8.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் க்ராஸ் எடிசன் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகளில் இயக்கும் வாய்ப்பையும் இந்த கார் வழங்குகிறது.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் க்ராஸ் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் ஆடியோ சிஸ்டம், புளூடூத் தொடர்பு வசதி, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுKல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்தியாவின் முதல் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது. இதனால், மிகச் சிறந்த பாதுகாப்புடன் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக போட்டி போடுகிறது.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

கடந்த ஆண்டும் பண்டிகை காலத்தின்போது முதல் ஆண்டு நிறைவாக டாடா நெக்ஸான் எஸ்யூவியின் க்ராஸ் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால், மீண்டும் இந்த பண்டிகை காலத்திற்கும் சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் இரண்டாம் ஆண்டு நிறைவு என்பதுடன், ஒரு லட்சம் நெக்ஸான் கார்கள் உற்பத்தி என்ற இரட்டை விஷயங்களை கொண்டாடும் விதமாக இந்த மாடல் வந்துள்ளது. இந்தமுறை அலங்கார வேலைப்பாடுகள் ஆரஞ்ச் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2019, 18:02 [IST]
English summary
Tata Motors has launched the 2019 Kraz special edition of the Nexon in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+