டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

பண்டிகை காலத்தையொட்டி கார், பைக் நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்வது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், தற்போது ஆட்டோமொபைல் துறை மிக மோசமான காலக் கட்டத்தில் இருப்பதால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஸ்பெஷல் எடிசன் மாடல் தவிர்க்க முடியாத விஷயமாகி இருக்கிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

இதனை மனதில் வைத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடலின் டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது நெக்ஸான் க்ராஸ் ( Kraz) என்ற பெயரில் வர இருக்கிறது. இந்த காரில் இடம்பெற இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து இதுவரை எந்த விஷயமும் இதுவரை தெரியவில்லை.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

நெக்ஸான் எஸ்யூவியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடன் வரும என்று தெரிகிறது. அதேபோன்று, உட்புறத்திலும் இதன் பிரதிபலிப்பாக சிறப்பு அலங்கார விஷயங்களை எதிர்பார்க்கலாம். புதிய அலாய் வீல்களும் வித்தியாசப்படுத்தும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட க்ராஸ் எடிசன் மாடலை போன்றே, டேஷ்போர்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கலாம். தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் மற்றும் Kraz எடிசன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

இந்த ஆண்டு நெக்ஸான் எஸ்யூவியில் க்ராஸ் மற்றும் க்ராஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் அறிமுகம்!

சாதாரண வேரியண்ட்டுகளைவிட கூடுதல் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடல் கூடுதல் மதிப்பை வழங்கும். விரைவில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2019, 16:13 [IST]
English summary
Tata Motors has teased the Nexon Kraz edition ahead of its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+