டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன் விபரம் கசிந்தது!
டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலின் விபரம் கசிந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் எடுத்து வருகிறது. இதற்காக, டியாகோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
டியாகோ விஎஸ் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது. இந்த கார் டைட்டானியம் க்ரே மற்றும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட கூரையுடன் விசேஷ சாம்பல் வண்ணக் கலவையில் வர இருக்கிறது.

இந்த காரின் முகப்பு க்ரில் அமைப்பு சைடு மிரர்கள், அலாய் சக்கரங்களில் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே ஆரஞ்ச் வண்ண அலங்கார விஷயங்கள் காரின் உட்புறத்திலும் இடம்பெற்றுள்ளது.
புதிய டாடா டியாகோ விஸ் எடிசன் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
பெட்ரோல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும், டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. விஸ் எடிசன் மாடலும் இதே தேர்வுகளில் கிடைக்கும் என்று நம்பலாம்.
வழக்கமான டாடா டியாகோ காரைவிட இந்த விஸ் எடிசன் காரில் கூடுதலாக பல தனித்துவமான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும்.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ, ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட கார்கள் வர இருக்கும் நிலையில், டியாகோ காருக்கு இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் அவசியமாகி இருக்கிறது. அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








