டாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் 2 புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!
டாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் இரண்டு புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு விலை குறைவான தேர்வும் விற்பனைக்கு வந்துள்ளது.

டாடா டிகோர் காம்பேக்ட் செடான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது எக்ஸ்இசட்ஏ என்ற வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் ரூ.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்து வந்தது.

இந்த நிலையில், டாடா டிகோர் காரின் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது. விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் எடுத்து வருகிறது. அதன்படி, டாடா டிகோர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் இரண்டு புதிய வேரியண்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

டாடா டிகோர் காரின் நடுத்தர விலையிலான எக்ஸ்எம்ஏ என்ற வேரியண்ட்டிலும் இப்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த வேரேியண்ட்டிற்கு ரூ.6.39 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனையில் இருந்து வந்த எக்ஸ்இசட்ஏ வேரியண்ட்டைவிட ரூ.61,000 குறைவான விலையில் இந்த வேரியண்ட் வந்துள்ளது.

அடுத்து, மிக அதிகபட்ச வசதிகளை அளிக்கம் டாப் வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் என்ற மிக விலை உயர்ந்த வேரியண்ட்டுக்கு ரூ.7.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்த எக்ஸ்இசட்ஏ ஏஎம்டி வேரியண்ட்டை விட ரூ.24,000 மட்டுமே கூடுதல் விலையில் அனைத்து வசதிகளையும் இந்த வேரியண்ட் அளிக்கும்.

இந்த இரண்டு புதிய வேரியண்ட்டுகளுமே வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். பட்ஜெட் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த எக்ஸ்எம் ஏஎம்டி வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும். அதிக வசதிகளுடன் வாங்க விரும்புவோருக்கு புதிய எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா டிகோர் காரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. டாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது பெட்ரோல் மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 84 எச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டாடா எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளது.

இந்த காரில் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள். டியூவல் சேம்பர் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் டோர் லாக், எஞ்சின் இம்மொபைலைசர் ஆகிய அம்சங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








