புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியின் விபரங்கள் வெளியானது

டொயோட்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் படங்கள், தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த வாரம் டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டைகட்சூ நிறுவனம் ராக்கி என்ற பெயரில் காம்பேக்ட் ரக எஸ்யூவியை டோக்கியோவில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்களுக்கு இணையான ரகத்தில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு

இந்த நிலையில், டைகட்சூ ராக்கி எஸ்யூவியின் அடிப்படையிலான அதே எஸ்யூவி டொயோட்டா பிராண்டில் ரெய்ஸ் என்ற பெயரில் வர இருக்கிறது. வரும் நவம்பர் துவக்கத்தில் இந்த புதிய டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவி உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது.

இதனிடைய, டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவியின் படங்கள், விபரங்கள் வெளியாகி உள்ளன. டைகட்சூ ராக்கி எஸ்யூவியிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பிரம்மாண்ட க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த காரில் 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு

புதிய ரெய்ஸ் எஸ்யூவிக்கு டொயோட்டா நிறுவனம் டிஆர்டி பேக்கேஜேயும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான டி பில்லர் அமைப்பு, எல்இடி பட்டைகளுடன் கூடிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வலிமையான பாடி கிளாடிங் சட்டங்கள், புதிய முன்புற பம்பர் அமைப்பு ஆகியவையும் வசீகரிக்கின்றன.

புதிய டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவியில் டேஷ்போர்டு அமைப்பானது டைகட்சூ ராக்கி எஸ்யூவியில் இருந்து பகிரந்து கொள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவியானது 3,995 மிமீ நீளமும், 1,695 மிமீ உயரமும், 1,620 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளது. மேலும், 2,525 மிமீ வீல் பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. இந்த புதிய கார் டொயோட்டா நிறுவனத்தின் உலகளாவிய டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி வெளியீடு

புதிய டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் 98 எச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்த புதிய டொயோட்டா ரெய்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சிறந்த வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களை கவரும். ஆனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக வெளியானத் தகவலால், ரெய்ஸ் எஸ்யூவி இந்தியா வருவதில் சந்தேகம் நிலவுகிறது.

Source

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2019, 11:08 [IST]
English summary
Toyota Raize compact SUV images leaked ahead of global debut in early next month.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+