ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்திய பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்று. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் காரணமாக, வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும், அந்த விலையில் 5 சீட்டர் மாடல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகவும் வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் புரொஜெக்ட் 2.0 திட்டத்தின்படி, பல புதிய மாடல்களை அதிரடியாக களம் இறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

அதன்படி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் லாங் வீல் பேஸ் (7 சீட்டர்) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது உள்ள டிகுவான் எஸ்யூவியின் அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

கடந்த 2016ம் ஆண்டு இரண்டு வீல் பேஸ் நீளம் கொண்ட மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அதில், ஸ்டான்டர்டு மாடலாக குறிப்பிடப்படும் குறைவான வீல் பேஸ் நீளம் கொண்ட மாடல் 2017ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தநிலையில், அதிக வீல் பேஸ் நீளமுடைய மாடலும் இந்தியா வர இருப்பதுதான் இப்போதைய முக்கிய செய்தியாக இருக்கிறது. அதேநேரத்தில், குறைவான வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலுக்கு மாற்றாக வருமா அல்லது இரண்டு மாடல்களுமே விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து இப்போது தகவல்கள் இல்லை. அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலானது டிகுவான் ஆல்ஸ்பேஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய ஆல்ஸ்பேஸ் மாடலானது 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வரும். அதாவது, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு நிகரான மாடலாக நிலைநிறுத்தப்படும். அதேநேரத்தில், 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். எனவே, கோடியாக் எஸ்யூவியைவிட விலை குறைவாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் இப்போது இருக்கும் அதே சிறப்பம்சங்கள், வசதிகள் புதிய ஆல்ஸ்பேஸ் மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இருக்கை வசதியில் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி அவுரங்காபாத் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். ரூ.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Carandbike

Most Read Articles
English summary
According to carandbike, Volkswagen has confirmed that the Tiguan AllSpace Long Wheelbase will be launched in the Indian market. However, the German carmaker is yet to decide whether the Tiguan LWB will be offered as an additional variant or completely replace the Tiguan SUV, currently on sale.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X